Homeசெய்திகள்சமூக வலைதள கணக்குகள் முடக்கம்..! அரசின் புதிய நடவடிக்கை..!

சமூக வலைதள கணக்குகள் முடக்கம்..! அரசின் புதிய நடவடிக்கை..!

சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக சென்றனர். அந்த நேரத்தில் விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகள் ரப்பர் புல்லட்களால் தாக்கப்பட்டனர். மேலும் அவர்கள் செல்லும் சாலையை மறிப்பது மற்றும் அவர்களை கைது செய்வது என பல வன்முறைகள் அறங்கேறின.

இந்நிலையில் தான் இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடு முழுவதும் நாளை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பாரத் பந்த் (Vivasayigal Velai Nirutham) நடைபெற்றது. எனினும் அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இன்றளவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டமானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. சற்றும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் அரசும் அவர்களின் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

எனினும் விவசாயிகளுக்கு ஏற்ற பதில் கிடைக்காத காரணத்தால் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த போராட்டத்தை நிறுத்துவதற்கு புதிய நடவடிக்கையாக விவசாயிகளில் சமூக வலைதள கணக்குகளை முடக்கம் (Social media accounts disabled) நடவடிக்கை ஒன்றை அரசு எடுக்கவுள்ளது. இது குறித்து இப்பதிவில் பாரக்கலாம்.

Social media accounts disabled

விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தான் வருகிறது. அந்த வரிசையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு தற்காலிகமாக (Social media accounts are disabled) முடக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஆம்புலன்சுக்கு வழி விடலைனா எவ்வளவு அபராதம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular