Homeசெய்திகள்அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம்.. பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர்…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம்.. பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர்…

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை ஆற்றினார். தொடர்ந்து இன்று தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மளிக்கு கூடியது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கான (Tamil Nadu Budget 2024 Schemes) நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் (Tamil Nadu Budget 2024) செய்தார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும், புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn Thittam) ஆனது விரிவாக்கப்படும் என கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தின் (Pudhumai Penn Scheme) படி உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு இத்திட்டத்தை நிறைவேற்றியும் வருகிறது.

Tamil Nadu Budget 2024 - 25

தற்போது இத்திட்டமானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் இந்த ஆண்டு முதல் புதுமைப் பெண் திட்டத்தின் படி ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu).

மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூபாய் 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார் நிதி அமைச்சர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை..! என் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular