கடந்த 2021 ஆண்டு வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன் மற்றும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வந்த நிலையில் நேற்று அல்லு அர்ஜுன் (Allu Arjun) பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் (Pushpa Part 2 Teaser) வெளியாகி உள்ளது.
தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படம் தான் புஷ்பா இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பான் இந்தியா திரைப்படமாக மாறியது. இந்த படத்தின் இயக்குநர் சுகுமார் ஆவார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் (Pushpa 2 Part) பாகம் தயாராகி வருகிறது. அந்த படத்திற்கு புஷ்பா 2: தி ரூள் (Pushpa 2: The Rule) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (09.04.2024) புஷ்பா படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு Pushpa 2 Teaser -ஐ படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டீசருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரே நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது புஷ்பா 2 படத்தின் டீசர். இதன் காரணமாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது புஷ்பா 2 டீசர். இதன் காரணமாக Pushpa 2 படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது என்பதை தெரிந்துக்கொள் முடிகிறது.