கோடை காலம் தொடங்கிவிட்டது. மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் அதிகமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வெயிலால் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு இந்த வானிலை மீது அதீத கோபம் கூட வரும் எனினும் இது காலநிலை நம்மால் இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் சில முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை தான் செய்ய வேண்டும்.
இந்த வகையில் இந்த வெயில் காலத்தில் நம் உடலை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதனை வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலமும் பாரம்பரிய உணவுகளை உண்பதன் மூலமும் நம் உடலை குளிர்ச்சியாக நாம் வைத்துக்கொள்ளலாம். இந்த பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடத்தை பிடிப்பது ராகி கூழ். இது உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. எனவே நாம் இப்பதிவில் இந்த ராகி கூழ் எளிமையாக எப்படி செய்வது (Ragi Kool Recipe in Tamil) என்பது பற்றி பார்க்கலாம்.
ராகி கூழ் செய்வது எப்படி (Ragi Koozh Recipe in Tamil)
தேவையான பொருட்கள்
- ராகி மாவு – 1/4 கப்
- மோர் – 1 கப்
- தண்ணீர் – 3 கப்
- உப்பு – தேவையான அளவு
ராகி கூழ் செய்முறை (Ragi Kool Recipe)
- முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள ராகி மாவை சேர்க்கவும்.
- அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
- இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் அதை மாற்றி அடுப்பில் வைக்கவும். அடுப்பில் தீ மிதமாக இருக்கவேண்டும். அதிகமாக இருக்க கூடாது.
- இப்போது கைவிடாமல் கிளறவும். சிறிது நேரத்தில் இது நன்றாக வெந்துவிடும். அதன் பிறகு அதை நன்றாக ஆரவிடவும். இதனை இரவு நேரத்தில் செய்து காலை வரை நன்கு ஆறவிடலாம்.
- கூழ் நன்கு ஆறிய பிறகு அதனுடன் தண்ணீர் மற்றும் மோர் சேர்த்து பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
- இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இந்த கூழை நாம் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.
இப்பதிவில் நாம் ராகி கூழ் செய்வது எப்படி (Ragi Kool Seivathu Eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம். இந்த ராகி கூழ் (Ragi Kool in Tamil) நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதனை வாரத்தில் 3 முறையாவது எடுத்தக்கொள்வதால் இந்த கோடை காலத்தில் நம் உடல் வெப்பமாதலை குறைக்கும். மேலும் இதனை பருகுவதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
Ragi Koozh Recipe in Tamil
இப்பதிவில் இந்த கோடை காலத்தில் நம் உடல் சூட்டை தணிக்கும் ராகி கூழ் எளமையாக செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Type: Appetizer
Cuisine: Tamilnadu
Keywords: Ragi Kool in Tamil
Recipe Yield: 2
Preparation Time: PT5M
Cooking Time: PT10M
Total Time: PT5M
Recipe Ingredients:
- Ragi flour – 1/4 Cup
- Buttermilk – 1 Cup
- Water – 3 Cups
- Salt – Required Quantity
Recipe Instructions:
Ragi Koozh Recipe in Tamil:
- முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள ராகி மாவை சேர்க்கவும்.
- அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
- இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் அதை மாற்றி அடுப்பில் வைக்கவும். அடுப்பில் தீ மிதமாக இருக்கவேண்டும். அதிகமாக இருக்க கூடாது.
- இப்போது கைவிடாமல் கிளறவும். சிறிது நேரத்தில் இது நன்றாக வெந்துவிடும். அதன் பிறகு அதை நன்றாக ஆரவிடவும். இதனை இரவு நேரத்தில் செய்து காலை வரை நன்கு ஆறவிடலாம்.
- கூழ் நன்கு ஆறிய பிறகு அதனுடன் தண்ணீர் மற்றும் மோர் சேர்த்து பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
- இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
4.49
இதையும் படியுங்கள்: பிளம் கேக் செய்வது எப்படி..? How to Make Plum Cake Recipe in Tamil..! |