Raja Raja Cholan History in Tamil பற்றி இப்பதிவில் நாம் பார்க்க உள்ளோம். அதற்கு முன் அவர் பற்றிய சிறு முன்னுரையை பார்க்கலாம். பொன்னியின் செல்வன் என்று பலரால் அறியப்படும் மன்னர் தான் ராஜ ராஜ சேழன். மேலும் Raja Raja Cholan Varalaru பற்றியும் பார்க்கலாம்.
இவர் 985 முதல் 1014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் (Raja Raja Cholan Period) ஆட்சிப்புரிந்த மன்னர் ஆவார். அன்று முதலே பல மக்களால் மிகப் பெரிய அரசராகக் கருதப்படுபவர் தான் இந்த இராஜ இராஜ சோழன், இவர் தலைமையின் கீழ் செயல்பட்ட சோழ பேரரசு முழு தென்னிந்தியாவையும் கைப்பற்றியது. மேலும் இது இந்தியாவுடம் மட்டுமின்றி அண்டை நாடான இலங்கை வரை விரிவடைந்தது. இதேபோல் வடகிழக்குப் பகுதியில் கலிங்கம் வரை விரிவடைந்தது.
Table of Contents
ராஜராஜ சோழன் பிறப்பு (Rajaraja Cholan Birth)
ராஜ ராஜ சோழனின் பிறப்பு என்பது மர்மமான ஒன்றாகதான் இன்றளவும் உள்ளது. இவரது பிறந்த தேதி குறித்த எந்த ஒரு ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இவர் இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்படும் சுந்தரசோழன் மற்றும் வானவன் மாதேவி ஆகியோருக்கு பிறந்தவர் ஆவார்.
இவர் தான் முதலாம் இராஜராஜன். மேலும் இவர் கிபி 985-ம் நூற்றாண்டு ஜூன் மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் அரசு கட்டில் ஏறினான் என்று கூறப்படுகிறது. மேலும் இவருடைய இயற்பெயர் (Raja Raja Cholan Name) அருள்மொழி வர்மன் ஆகும்.
ராஜராஜ சோழனின் சிறப்புகள்
- சோழர்களின் அரசை சிறப்பாக அமைத்து அதனை நிலைபெறச் செய்த பேரரசர்களில் முக்கியமான ஒருவர் என்றால் அவர் தான் ராஜராஜன். இவர் உருவாக்கிய சோழ பேரரசு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் வரை நிலைத்து நின்றது. அதற்கு முக்கிய காரணம் இவர் சோழ போரசிற்கு அமைத்த அடிப்படை தான். மேலும் இவர் ஆட்சியில் இருந்தவரை நட்டை வெற்றி பாதையில் வழிநடத்தினார்.
- அதுமட்டுமின்றி இவர் ஆட்சிக் காலத்திலேயே இவருடையா மைந்தனான இராஜேந்திர சோழனையும் திறமையான மன்னராகவும் மாற்றினார். மேலும் இவர் ஆட்சி செய்த் காலம் சோழர் வரலாற்றின் பொற்காலம் என்று கூறப்படுகிறது.
- இவரது ஆட்சி காலத்தில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் ஆகியவை நன்கு வளர தொடங்கியது. மேலும் இவர் ஆட்சி காலத்தில் தான் தேவாரத் திருமுறைகளும் நாடு முழுவதும் பரவின. இதன் காரணமாக சைவ சமயம் நாடு முழுவதும் பரவியது.
- தஞ்சை பெரிய கோவில் உள்ள சுவர் மீது உள்ள ஓவியம் இராசராசன் ஓவியமாக இருத்தல் வேண்டும்.
ராஜராஜ சோழனின் மனைவிகள் (Raja Raja Chola Wifes)
- உலகமாதேவியார்
- சோழமாதேவியார்
- இலாட மாதேவியார்
- அபிமானவல்லி
- திரைலோக்கிய மகாதேவி
- பஞ்சவன்மாதேவி
- பிருத்வி மகாதேவி
- மீனவன் மாதேவியார்
- நக்கன் தில்லை அழகியார்
என ராஜ ராஜ சோழனுக்கு ராணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ராஜராஜ சோழனின் குழந்தைகள்
அரசர் ராஜ ராஜ சோழனுக்கு மூன்று குழந்தைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருடைய மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மகள்கள் (Raja Raja Cholan Daughter Name) குந்தவை, மாதேவடிகள் ஆவர்.
ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்கள் (Raja Raja Cholan Other Names)
மக்களால் பெரிதும் பாராட்டப்படும் மன்னர் ராஜ ராஜ சோழன் (King Raja Raja Cholan) பல சிறப்பு பெயர்கள் கொண்டும் அழைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
- ராஜராஜன்
- காந்தலூர் கொண்டான்
- மும்முடிச்சோழன்
- சோழநாராயணன்
- அரித்துர்க்கலங்கன்
- அருள் மொழி
- ரணமுக பீமன்
- ரவி வம்ச சிகாமணி
- ராஜ பாண்டியன்
- ராஜ கேசரிவர்மன்
- சோழேந்திர சிம்மன்
- ராஜ மார்த்தாண்டன்
- ராஜேந்திர சிம்மன்
- ராஜ விநோதன்
- உத்தம சோழன்
- உய்யக் கொண்டான்
- சோழகுல சுந்தரன்
- சோழ மார்த்தாண்டன்
ராஜராஜ சோழனின் நாடு
ராஜராஜ சோழன் (Raja Raja Cholan) அரசனாக பட்டம் பெற்ற காலத்தில் சோழ பேரரசு வடக்கு பகுதியில் தொண்டைநாடு வரை பரவி இருந்தது. மேலும் தெற்கு பகுதியில் பாண்டிய நாட்டின் வட எல்லை வரை மட்டுமே பரவியிருந்தது.
ராஜராஜ சோழன் போர்கள்
ராஜராஜ சோழன் இன்றளவும் சிறந்த மன்னராக இருக்க முக்கியமான காரணங்களுள் ஒன்று தான் அவருடைய படை. மேலும் அவரது ஆட்சியில் அவர் நடத்திய போர்கள் ஆகியவை தான். அவற்றில் சிலவற்றை பார்கலாம்.
- காந்தளூர் சாலைப் போர்
- பாண்டியருடன் போர்
- மலைநாட்டு படையெடுப்பு
- இலங்கைப் படையெடுப்பு
- சாளுக்கிய போர்
- தெலுங்க நாடு
- கீழை சாளுக்கிய போர்
- மாலத்தீவு படையெடுப்பு
- சமயக் கொள்கை
ராஜராஜ சோழனின் ஆரம்பகால வாழ்க்கை
பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன் பரந்தாங்க சுந்தர சோழன் மற்றும் வானன்மாதேவி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். மேலும் இவருக்கு ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவை என்ற உடன்பிறந்தவர்கள் இருந்தனர்.
ராஜராஜ சோழனின் நற்குணஙகள்
- ராஜராஜசேழன் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுத்து போரில் வென்று அந்த நாட்டை கைப்பற்றியவுடன் அங்கிருக்கும் மக்களுக்கு எந்த விதமான கஷ்டத்தையும் கொடுக்காமல் நல்ல முறையில் நடத்துவார். மேலும் மக்களுக்கு தேவையான அனைத்தையும் சிறப்பாக செய்வார்.
- கடல் கடந்து சென்று இலங்கையை வென்ற இராஜராஜ சோழன் அந்த வெற்றியின் காரணமாகதான் அங்கு மிகப்பெரிய சிவன் கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
- ராஜராஜ சோழனின் ஆட்சியின் போது தான் எதிர் நாட்டு மக்கள் கூட நம் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- இலங்கையை வென்ற பிறகு கங்கர்களோடு கங்கபாடி என்னும் நாடு மற்றும் நூல்பவர்களோடு நூலம்பாடி என்னும் நாடு ஆகியவற்றையும் கைப்பற்றி அவற்றை சோழ நாட்டுடன் இணைத்துக்கொண்டார்.
- அதன் பிறகு மைசூரும் ராஜராஜ சோழனால் கைப்பற்றப்பட்டு சோழர் நாட்டுடன் இணைக்கப்பட்டது.
- தெற்கு திசையில் மட்டுமில்லாமல் வடக்கு திசையிலும் ஆட்சி செய்து கொண்டிருந்தார் ராஜராஜசோழன். இதுமட்டுமின்றி எண்ணற்ற நாடுகளையும் கைப்பற்றினார்.
ராஜராஜ சோழனின் மதம்
மன்னர் ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர் என்று பலரும் கூறுகின்றனர். இவர் சைவ மதத்தை சார்ந்தவர் என்ற போதிலும் மற்ற மதத்தவர்களை அவர் ஒருபோதும் புண்படுத்தியதில்லை. அனைத்து மக்களையும் மதித்து அனைவருக்கும் உதவிகளை செய்தார். அதுமட்டுமின்றி தஞ்சாவூரில் சிவபெருமானுக்கு கோவில் கட்டியது போல் பகவான் விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்களை கட்டியுள்ளார் ராஜராஜ சோழன்.
ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவில்
- ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் பல முக்கிய நிகழ்வுகள் போர்கள் என பல சாதனைகள் நடைபெற்றாலும் அக்காலத்தில் செய்த மாபெரும் சாதனை என்றால் அது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியது தான். இந்த கோவில் இன்ரளவும நிலைத்து நிற்கிறது. இந்த கோவில் நிச்சயம் மனிதர்களால் கட்டி இருக்க முடியாது என்ற பல ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர்.
- ஏனெனில் தஞ்சை பெரிய கோவில் முழுவதும் பெரிய பெரிய பாறைகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை சுற்றுவட்டாரத்தில் 100 கிலோ மீட்டர் வரை மலைகளோ பாறைகளே இல்லை என்பது தான் ஆச்சர்யபடவைக்கும் விதமாக உள்ளது. எனவே எந்தவித நவீன தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத அந்த காலகட்டத்தில் எவ்வாறு இவ்வளவு பெரிய கோவிலை கட்டி இருக்க முடியும் என்பது வியப்பாகதான் உள்ளது.
- இந்த தஞ்சை பெரிய கோவில் தான் சோழர்களின் வரலாற்றுச் சின்னமாகவும் உள்ளது. மேலும் இந்த கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
- இவை எல்லாம் ஒருபுறம் இருக்க ஒரு மன்னர் தன் ஆட்சியில் ஒரு கோவிலை கட்டினால் அதற்கு மன்னர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பெயர்களை தான் கல்வெட்டுகளில் பொரிப்பர். ஆனால் இந்த கோவிலில் அவ்வாறு இல்லை. அந்த கோவிலுக்காக உழைத்த ஒவ்வொருவரின் பெயரையும் கல்வெட்டுகளில் பொரித்து வைத்திருப்பது மிகப்பெரும் ஆச்சரியப்பட விஷயமாகும். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்த கோயிலுக்காக வேலை செய்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவியவர்களின் பெயரை கூட அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
- இந்த தஞ்சை பெரிய கோவில் தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் இந்த கோவில் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் பெயர் இராஜராஜேஸ்வரம் என்பது தான். 1005-ம் ஆண்டு கட்ட தொடங்கிய இந்த கோவில் 1010-ம் ஆண்டு நிறைவுபெற்றது. இவற்றின் மூலம் ராஜராஜ சோழனின் நல்ல குணம் பற்றி நாம் நன்கு அறியலாம்.
ராஜராஜ சோழனின் இறப்பு (Rajaraja Chola Death)
தன் வாழ்நாளில் எண்ணற்ற வெற்றிகளையும் பல நல்ல செயல்களையும் செய்தவர் ராஜராஜசோழன். இவருடைய ஆட்சிகாலம் கிபி 1014-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சிக்கு பிறகு பல மன்னர்கள் ஆட்சி செய்தாலும் இவருடைய ஆட்சிகாலத்தை போல் யாராலும் நல்ல ஆட்சியை கொடுக்க முடியவில்லை என்றே கூறலாம்.
இப்பதிவில் நாம் ராஜராஜ சோழன் அவர்களின் வாழக்கை வரலாறு (Raja Raja Cholan History in Tamil) பற்றி பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு கால வரலாறு..! Thanjai Periya Kovil History in Tamil..! |
ராஜராஜ சோழன் வரலாறு – FAQ
1. ராஜராஜ சோழனின் இயற்பெயர் என்ன?
ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன் ஆகும்.
2. ராஜராஜ சோழனின் மதம் என்ன?
மன்னர் ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர் என்று பலரும் கூறுகின்றனர்.
3. . ராஜராஜ சோழனின் மகள் பெயர் என்ன?
ராஜராஜ சோழனின் மகள் பெயர் குந்தவை.
4. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம்?
985 முதல் 1014
5. ராஜராஜ சோழனின் தந்தை பெயர் என்ன?
ராஜராஜ சோழனின் தந்தை இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்படும் சுந்தரசோழன் ஆவார்.