Homeசெய்திகள்குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரக்ஷனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரக்ஷனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் குறித்த தகவல்கள் தொடர்ந்து வொளியாகிக்கொண்டுதான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு புரோமோ வெளியாகிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான Rakshan salary in CWC குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாக ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் தனது பயணத்தை துவங்கினார். ஆனால் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை இவர் வைத்துள்ளார்.

Rakshan salary in CWC

இந்த சூழலில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோட்-க்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இது இவர் கடந்த சீசனில் வாங்கிய சம்பளத்தின் விவரம் (CWC Rakshan salary) என்றும் கூறியுள்ளனர். இப்போது தொடங்கவுள்ள புதிய சீசனில் ஒரு எபிசோடுக்கு என்ன சம்பளம் (CWC Rakshan Sambalam) வாங்க உள்ளார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிரப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: நீலாம்பரி கேரக்டருக்கு முதல் சாய்ஸ் ரம்யா கிருஷ்ணன் இல்லை..! யார் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular