ஒவ்வொரு மதத்திலும் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக இருப்பது ரமலான் பண்டிகை. இந்த பண்டிகை இஸ்லாமியர்களின் காலண்டர் கணக்குப்படி 9-வது மாதம் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக ஒரு மாத காலம் நோன்பு (Ramadan Nombu 2024) இருப்பார்கள். இது இஸ்லாமியர்களின் மரபாக கருதப்படுகிறது. இந்த நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு அருந்துவார்கள். விடியற்காலை உணவு அருந்திவிட்டு மாலை சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பு வழக்கத்தை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடைமைகளில் இந்த ரமலான் நோன்பு முக்கிய ஒன்றாக உள்ளது. பிறை கணக்குப்படி ரமலான் நோன்பு 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதை பொறுத்து ரமலான் நோன்பு தொடங்கப்படும். இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டில் நேற்று முன் தினம் பிறை தென்பட்ட நிலையில் அந்த நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) நோன்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தல் (Ramadan Nombu Date 2024 in Tamil Nadu) நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று (செவ்வாய் கிழமை) ரமலான் நோம்பு தொடங்கியுள்ளது (Ramadan Nombu 2024 In Tamil Nadu).
இந்த நோன்பு தொடங்கி 30 நாட்கள் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் குர் ஆனை நினைவு கூறுவது மட்டுமல்லாமல், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற செயல்கள் அல்லா உடனான பிணைப்பை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த ரமலான் நோன்பு காலக்கட்டத்தில் சொர்க்கவாசல் திறந்திருப்பதாகவும், நரகத்தின் வாசல் மூடப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.