தங்கல் படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் தான் ராமாயணம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார் என்ற தகவல் (Ramayana Movie latest news) வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப் பட புகழ் கதாநாயகன் யாஷ் இப்படத்தின் இராவணனாக நடிக்கிறார். பாபி தியோல் இந்த படத்தின் அனுமனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுபோன்ற தகவல்கள் இப்படத்தினை பற்றி அடிக்கடி வெளிவந்தாலும், ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், ராமயணம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராமன், சீதை காதாபாத்திரங்கள் நடிக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதில் இராமனாக சாய்பல்லவி (Sai Pallavi new film) நடிக்கிறார். இதனால் (Sai Pallavi Ramayana movie) சீதையாக சாய்பல்லவியும், ராமனாக ரன்பீர் கபூர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த படம் முதல் 3 பாகங்களாக வெளிவர உள்ளன. இதில் முதல் பாகம் ஏப்ரல் முதல் ஜூலை வரை எடுக்கப்பட இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது சாய் பல்லவி தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ok then, I am sold. Leaked images from the set of #Ramayana#RanbirKapoor seems to have got the 'saumyata' of Lord Rama on point. And #SaiPallavi looks divine as #Sita. The look is good. Now let's see if #NiteshTiwari can deliver the final product…
— Abhimanyu Mathur (@MadCrazyHatter_) April 27, 2024
Pics: @ZoomTV pic.twitter.com/TEV4bQ8mkL
மேலும் படிக்க: என்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..! |