HomeசினிமாRamayanam Serial: மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல்… ப்ரோமோ ரிலீஸ்…

Ramayanam Serial: மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல்… ப்ரோமோ ரிலீஸ்…

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் முன்பு ஒளிபரப்பான ராமாயணம் சீரியல் (Ramayanam Serial in Sun TV) மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமஸ்கிருத காவியங்களில் ஒன்று தான் இராமாயணம். இந்த காவியம் ஆனது பெருமாளின் அவதாரமாக கருதப்படும் இராமனின் வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது. இந்த இராமாயன காவியத்தின் கதையானது கி.மு. 500 முதல் கி.மு. 100 வரை நடைபெற்றது என கூறப்படுகிறது.

இந்த இராமாயண காவியத்தை வடமொழியில் வால்மீகி எழுதினார். அதனை தழுவி தமிழ் மொழியில் கம்பர் எழுதினார். இதன் காரணமாக தமிழில் உள்ள ராமாயணம் கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது (Ramayanam in Tamil). இராமணின் கதை கூறும் இந்த இராமாயணத்தை பல தொழைக்காட்சி நிறுவனங்கள் சீரியளாக ஒளிபரப்பி உள்ளன. அந்த வகையில் சன் டிவியும் இராமாயண சீரியளை ஒளிபரப்பி உள்ளது.

அயோத்தியை ஆண்ட ரகு வம்சத்தை சேர்ந்த இளவரசரான ராமர், அவர் மனைவியான சீதை மற்றும் இலங்கை வேந்தனான இராவணன் மூவரை மையமாகக் கொண்டு நகரும் இந்த காவியம் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி (Ramayanam Serial in Tamil) மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் படிக்க: புதிய சாதனை படைத்த சிறகடிக்க ஆசை சீரியல்..! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular