தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் தான் படையப்பா (Padayappa Movie). இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினிகாந்த் நடித்தப்படங்களில் முக்கிய படமாகவும் இந்த படம் மாறியது.
இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்ட கதாபாத்திரம் தான் நீலாம்பரி கதாபாத்திரம் (Neelambari Character). இந்த கதாபாத்திரத்தில் நடிகை நீலாம்பரி நடித்து இருந்தார். இவர் நடித்து இருந்தார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருந்தார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் இவருக்கு பொருந்திபோனது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் படி நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த இந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் இல்லையாம். வேறொரு நடிகை தான் நடிக்கஇருந்தாராம் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டாராம்.
இந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த கதாநாயகி நடிகை மீனா. அன்றைய காலகட்டத்தில் அதாவது 90களில் நடிகை மீனா ரஜினிகாந்துடன் இனைந்து பல படங்களில் நடித்தார். எனவே அவருடன் இணைந்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று அவருடைய தயார் கூறியதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இவர் மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் நீலாம்பரி ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்த கதாபாத்திரத்திற்கு (Padayappa Movie Neelambari Character) ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான் பொருந்துவார் என்று கூறுகின்றனர் மற்றும் சிலர் மீனா இந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக இருந்திருப்பார் என்று கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? |