தனது இயக்கத்தின் மூலம் அடுத்தடுத்து பிலாக்பஸ்டர் படங்களை முன்னணி நடிகர்களை கொண்டு கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தற்போது சூப்பர் ஸ்டாரின் 171 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கு சல்லடை போட்டு சலித்து ஒரு முன்னணி கதாநாயகரை தேர்ந்தெடுத்து உள்ளார் என திரைத்துறையினரிடையே கூறப்பட்டு வருகிறது.
தமிழ் திரை துறையின் முக்கிய முன்னணி நடிகர்களான கமல், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களை வைத்து சிறந்த திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படங்களில் இவர்களுக்கு வில்லனாகவும் சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் தான் நடித்தார்கள். அவர்களின் கதாபாத்திரமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை கதாநாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படம் ரஜினியின் 171 வது படம் என்பதால் தலைவர் 171 (Thalaivar 171) என தமிழ் ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறது.
இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு யாரை வில்லனாக லோகேஷ் நடிக்க வைக்க போகிறார் என்பது தான் தற்போது தமிழ் திரைப்பட ரசிகர்களின் முக்கியமான கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால் இவர் முன்பு இயக்கிய விக்ரம் படத்தில் அனைவரையும் வியக்கும் வகையில் கமலுக்கு வில்லனாக ரோலக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வரைத்திருந்தார். இந்த நிலையில் ரஜினிக்கு வில்லனாக யார் இருப்பார்கள்? என அனைவரும் ஆவர்கமாக உள்ளனர்.
தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கிடம் (Ranveer Singh) பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கிட்டத்தட்ட அவர் வில்லனாக நடிப்பது உறுதியாகி உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ரஜினியின் வில்லன் கதாபாத்திரம் தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.