மக்களவை தேர்தல் (Parliment Election 2024) தமிழகத்தில் நாளை (19.04.2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெருவதற்காக அனைத்துகட்சிகளும் நிறைய வாக்குருதிகளை மக்களுக்கு அறிவித்துள்ளது. அதேபோல் வாக்களிக்க செல்லும் மக்களுக்காக அரசு மற்றும் தேர்தல் ஆணையமும் நிறைய சேவைகளை அறிவித்துவருகிறது.
நாளை (ஏப்ரல் 19) தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 39 தொகுதிகளிலும் 68,321 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குசாவடிகளுக்கு பொதுமக்கள் சென்று வாக்களித்துவிட்டு வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
நகர்ப்புறங்களில் இருந்து வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி நாளை வாக்கு சாவடி செல்ல இலவச பேருந்துகள் (Free Travel for Election) இயக்கப்பட உள்ளன என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு இணையாக தமிழக தேர்தல் ஆணையம் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நாளை வாக்குச்சாவடி செல்ல இலவச வாகனங்களை இயக்குகிறது தேர்தல் ஆணையம். அந்த வாகனத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1950 என்ற எண்ணை அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி நகர்புறங்களிலும் இலவச ரேபிடோ சேவையையும் தமிழக தேர்தல் ஆணையம் (Election Commision of Tamil Nadu) ரேபிடோ நிறுவனத்துடன் (Rapido Bike Taxi) இணைந்து அறிவித்துள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தனியார் பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ இணைந்து இலவச மைக் டாக்சி சேவையை நாளை வழங்கவுள்ளது. இந்த சேவையானது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் மதுரை போன்ற 5 நகரங்களில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்க செல்ல இலவசமாக பைக் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாளை (19.04.2024) வாக்குச்சாவடி செல்வதற்காக பைக் டாக்சியை புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தி ரேபிடோவில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.