Rasmalai Recipe: உணவு நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாகும். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் துரித உணவு மற்றும் காரமான உணவு வகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து உண்டு வருகின்றன. அதற்கு இடையில் கண்களை கவரும் வகையிலும் உண்டவர் நாவில் இனிப்பு சுவையை தந்து மீண்டும் உண்ண தூண்டும் ரசமலாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளாம்.
ரசமலாய் ஒரு பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகை ஆகும். பாலாடைக்கட்டி கொண்டு இந்த ரசமலாய் தயாரிக்கப்படுகிறது. கெட்டியாக இருக்கும் பாலேட்டை பந்து போல் உருட்டி சிறிது தட்டியது போல் செய்து அதில் ஏலக்காய், முந்திரி மற்றும் பாதாம் தூவி இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த ரசமலாய் செய்வதற்கான முழுமையான விளக்கத்தை (Rasmalai Recipe in Tamil) இந்த பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
ரசமலாய் பெயர் காரணம்
Rasmalai ஆசிய கண்டத்தில் உருவான ஒரு பால் சார்ந்த இனிப்பு வகை ஆகும். அதுவும் குறிப்பாக இந்தியாவின் துணைக்கண்டம் வங்காளத்தில் தோன்றியது இந்த ரசமலாய். இந்த ரசமலாய் பால் ஆடைகட்டியுடன் சுவையான இனிப்பு நீர் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை ஆகும்.
இந்த ரசமலாய் என்ற பெயர் இந்தி சொற்கலான ரச மற்றும் மலாய் என்ற இரு வார்த்தைகளில் இருந்து உருவானது ஆகும். ரச என்பதன் பொருள் சாறு மற்றும் மலாய் என்பதன் பொருள் பாலேடு என்பதாகும்.
ரசமலாய் செய்வது எப்படி (How to Make Rasmalai) Rasmalai Recipe
சுவையான ரசமலாய் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ரசமலாய் செய்முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு விசேஷங்களின் போது இந்த இனிப்பு ரசமலாய் செய்து அனைவருக்கும் பகிருங்கள்.
தேவையான பொருட்கள் (Rasmalai Ingredients)
- பால் – 1-1/2 லிட்டர்
- சர்க்கரை – 3 டம்ளர்
- பாதாம் பருப்பு – 5
- முந்திரி பருப்பு – 5
- பிஸ்தா – 4
- மைதா மாவு – 2 டேபுள் ஸ்பூன்
- குங்குமப்பூ – 3 முதல் 5
- எலுமிச்சம் பழம் – 1
செய்முறை (Rasmalai Seivathu Eppadi)
- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காய்ந்த பாலில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அந்தச் சாறை அந்த பாலில் விட்டு பாலை திரிய விடவும்.
- பிறகு அந்த திரிவடைந்த பாலாடையை வடிகட்டி குளிர்ந்த நீர் கொண்டு 2 முதல் 3 முறை வடிக்கட்ட வேண்டும். அதன் பிறகு அந்த பாலாடையில் மைதா போட்டு நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உள்ளங்கையில் வைத்து குலாப் ஜாமுன் மாதிரி உருட்டி கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் 3 டம்ளர் சந்நரைக்கு 13 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும.
- சர்க்கரை நன்கு கரைந்தவுடன் நம் உருட்டி வைத்த இந்த உருண்டைகளை அதில் போட்டு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்க வேண்டும்.
- பிறகு அந்த உருண்டைகளை திருப்பி போட்டு மறுபடியும் எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும்.
- திரும்ப மற்றொரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து பால் கொதித்த உடன் அதில் சிறிதளவு குங்குமப்பூ போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே பாலில் நன்றாக காய்ந்தவுடன் சர்க்கரை போட்டு சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் சுண்ட விட வேண்டும்.
- பால் சிறிதளவு சுண்டிவுடன் அதில் நாம் ஊறவைத்த குங்குமப்பூவை போட்டு இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி நன்கு பொடி பொடியாக நறுக்கி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதில் பாதாம் பொடி பொடியாக நறுக்கி பருப்பு முந்திரிப்பருப்பு, பிஸ்தாவை அதில் போட்டு கலக்கவும்.
- அதன் பின்னர் நாம் சர்க்கரை பாகில் போட்டு வைத்த எடுத்த பாலாடை உருண்டைகளை இந்த பால் கலவையில் போட்டு இறக்கினால் சுவையான ரசமலாய் தயார்.
Rasmalai Recipe: பார்க்கும் போதே ருசிக்க தூண்டும் ரசமலாய்… வீட்டிலேயே செய்வது எப்படி..!
அனைவருக்கும் பிடித்த சுவையான ரசமலாய் செய்வது எப்படி (Rasmalai Recipe in Tamil) என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
Type: Dessert
Cuisine: Bangladesh
Keywords: Rasmalai Recipe. How to Make Rasmalai
Recipe Yield: 5
Preparation Time: PT5M
Cooking Time: PT40M
Total Time: PT45M
Recipe Ingredients:
- Milk – 1-1/2 litres
- Sugar – 3 tumblers
- Almonds – 5
- Cashews – 5
- Pistachios – 4
- Maida flour – 2 tablespoon
- Saffron – 3 to 5
- Lemon – 1
Recipe Instructions: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ந்த பாலில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அந்தச் சாறை அந்த பாலில் விட்டு பாலை திரிய விடவும். பிறகு அந்த திரிவடைந்த பாலாடையை வடிகட்டி குளிர்ந்த நீர் கொண்டு 2 முதல் 3 முறை வடிக்கட்ட வேண்டும். அதன் பிறகு அந்த பாலாடையில் மைதா போட்டு நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உள்ளங்கையில் வைத்து குலாப் ஜாமுன் மாதிரி உருட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் 3 டம்ளர் சந்நரைக்கு 13 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும. சர்க்கரை நன்கு கரைந்தவுடன் நம் உருட்டி வைத்த இந்த உருண்டைகளை அதில் போட்டு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்க வேண்டும். பிறகு அந்த உருண்டைகளை திருப்பி போட்டு மறுபடியும் எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும். திரும்ப மற்றொரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து பால் கொதித்த உடன் அதில் சிறிதளவு குங்குமப்பூ போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதே பாலில் நன்றாக காய்ந்தவுடன் சர்க்கரை போட்டு சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் சுண்ட விட வேண்டும். பால் சிறிதளவு சுண்டிவுடன் அதில் நாம் ஊறவைத்த குங்குமப்பூவை போட்டு இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி நன்கு பொடி பொடியாக நறுக்கி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதில் பாதாம் பொடி பொடியாக நறுக்கி பருப்பு முந்திரிப்பருப்பு, பிஸ்தாவை அதில் போட்டு கலக்கவும். அதன் பின்னர் நாம் சர்க்கரை பாகில் போட்டு வைத்த எடுத்த பாலாடை உருண்டைகளை இந்த பால் கலவையில் போட்டு இறக்கினால் சுவையான ரசமலாய் தயார்.
4.5
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..! |