தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் (Rathnam Box Office Collection) எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஷால் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது. இந்த படம் ஒரு டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படம் ஆகும். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடித்த படம் தான் ரத்னம் ஆகும் (Vishal Rathnam Movie). இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இந்த ரத்னம் திரைப்படம் விஷால் மற்றும் ஹரி இணைந்துள்ள மூன்றாவது படம் ஆகும். இதற்கு முன்பு தாமிரபரணி மற்றும் பூஜை போன்ற படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு DSP இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதைகளத்தை கொண்டுள்ள இந்த படம் நேற்று (26.04.2024) தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கேரளாவில் 12 லட்சம் ரூபாய், கர்நாடகாவில் 45 லட்சம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1 கோடியே 75 ரூபாய் வசூல் (Vishal Movie Box Office Collection) செய்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரத்னம் திரைப்படம் முதல் நாள் வசூலாக 6 கோடியே 42 லட்சம் ரூபாய் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக இந்த படம் 7 கோடியே 52 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: SK ரசிகர்களுக்கு குட் நியூஸ்… சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்..! |