Homeசெய்திகள்இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாது..!

இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாது..!

ஒவ்வொரு தெருக்களிலும் ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பொருட்களை வாங்கி பயன் பெருகின்றனர். இந்த நியாய விலைக் கடைகளில் மற்ற இடங்களை ஒப்பிடும்போது பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் காரணமாக இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த கடைகளில் பலவிதமான வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்கள் விற்கப்பட்டால் மக்கள் அதிகம் வாங்க வேண்டும் என்று நினைப்பது இந்த பாமாயில் (Ration Shop Palm Oil) பாக்கெட்டுகளை தான். ஏனெனில் இந்த பாமாயில் பாக்கெட்டுகளின் விலை மற்ற கடைகளை ஒப்பிடும் போது இந்த நியாயவிலைக் கடைகளில் பாமாயில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் ஒரு பாக்கெட்டின் விலை ரூ.30 மட்டும் தான். மேலும் இந்த பாமாயில் (Ration Kadai Palm Oil) அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனை பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும் சிலர் இதனை பயன்படுத்துவது இல்லை. இதற்கான காரணம் இந்த பாமாயில் உண்பதால் பித்தம் அதிகமாகும்.

இதனை கருத்தில் கொண்டு தான் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் போது திமுக தாங்கள் ஆட்சி அமைத்தால் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக கடலையெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று கூறியது. இந்நிலையில் தற்போது விவசாயிகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு திமுக அரசு தாங்களுடை அறிக்கையில் கூறியப்படி விரைவில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு (Ration Shop Oil) பதிலாக கடலை எண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் (Coconut Oil Ration Shop) வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த எந்த ஒரு அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Coconut Oil Ration Shop
இதையும் படியுங்கள்: வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular