மக்களவை தேர்தலில் நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்தது தொடர்பாக ரத்னம் படத்தின் புரொமோஷன் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள படம் தான் (Rathnam movie) ரத்னம். இந்த படத்தின் புரோமோன் நிகழ்வு சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் விஷாலிடம், ஒரு மாணவர் நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு செலுத்த சைக்கிளில் சென்றதற்கான காரணம் நடிகர் விஜய்யா? அவர் தான் உங்களின் இன்ஸ்பிரேஷன் தான் காரணமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால், விஜய்யை பொறுத்தவரை அவரின் தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். ஆனால் வாக்களிக்க சைக்கிளில் சென்றதற்கு நடிகர் விஜய் காரணம் இல்லை என தெரிவித்தார்.
என்னிடம் வண்டியில்லை, அப்பா, அம்மாவிடம் தான் வண்டி உள்ளது. நான் என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன் என கூறினார். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு இருக்கும் ரோடு கன்டிஷனைக் பார்த்தால் சஸ்பென்ஷனை ஆண்டுக்கு 3 முறையெல்லாம் மாற்ற என்னிடம் காசில்லை. அதனால் தான் நான் சைக்கிளில் வந்தேன் என தெரிவித்தார். சைக்கிளில் சென்றால் டிராபிக் இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று சென்றேன் என கூறினார்.
அரசியல் வருகை குறித்து கேட்ட செய்தியாளரின் (Vishal political speech in Ratnam movie promotion) கேள்விக்கு, ஒருமுறை தான் சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. நான் அரசியலுக்கு வருவது உறுதி. கண்டியாக வருவேன். 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். ஆனால் அரசியலுக்கு என்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினார்.
மக்களுக்கு நீங்கள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் நடிக்கும் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு (Rathnam movie Update) வரபோகிறோம். நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டியது உங்கள் கடமை எனக் கூறினார். மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏ என்றால் மட்டும் தனியார் மருத்துவமனைக்கு செல்வது நியாயமா என கூறினார்.
நிறைய பிரச்சனைகள் இங்கு உண்டு. மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. நடிகர் சங்கத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கிவிட்டன. இந்த ஆண்டு இறுதியில் (Vishal political speech in Ratnam movie promotion) முடிவடைந்துவிடும் என்று கூறினார் விஷால்.
மேலும் படிக்க: பயில்வானை மறைமுகமாக சண்டைக்கு அழைத்த சண்டைக் கோழி நாயகன்..! |