இந்திய அணியில் உள்ள வீரர்களில் மிகவும் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் என்றால் அவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணியின் சீனியர் பிளேயராகவும், மேலும் முக்கிய வீரராகவும் உள்ளார். இவர் தனது பந்து வீசும் திறன் மூலம் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
இவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது முதல் இன்று வரை பல போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்து தான் வருகிறார். மேலும் பல வரலாற்று சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய சாதனையை (Ravichandran Ashwin New Record) படைத்து உள்ளார். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த அணிகளுக்கு இடையே 4-வது போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடினார்.
இந்த போட்டியில் அவர் 1 விக்கெட்டை எடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் கூட இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இவர் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை (Ravichandran Ashwin Record) படைத்துள்ளார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ரஞ்சி போட்டியில் இருந்து விலகிய முக்கிய வீரர்..! இதுதான் காரணமா? |