நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாட்டின் 18-வது மக்களவை தேர்தலை சுதந்திரமாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் மக்களவை தேர்தல் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆர்.பி.ஐ விடுமுறை (Lok Sabha Election 2024 bank holiday) அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் 26-ஆம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதியும், 6வது கட்ட தேர்தல் மே 25ம் தேதியும், 7ம் கட்ட தேர்தல் ஜுன் மாதம் என மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் தினம் வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
முதல் கட்டமாக நாளை (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், தமிழ்நாடு 39-இடங்களில் வாக்குபதிவு நளடைபெறும். இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் 5-இடங்கள், அருணாச்சல பிரதேசம் 2-இடங்கள், மணிப்பூர் 2 -இடங்கள், மேகாலயா 2-இடங்கள், மிசோரம் 1-இடம், நாகலாந்து 1-இடம், சிக்கிம் 1-இடம், லட்சத்தீவு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி.
இதனை தொடர்ந்து நாளை சென்னை, டேராடூன், இட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, நாக்பூர், மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு (vangi vidumurai 2024) நாளை ஏப்ரல் 19 தேதி விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது ஆர்.பி.ஐ வங்கி.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பொது விடுமுறை (Lok Sabha Election 2024 bank holiday in tn) அந்தந்த மாநிலங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் ஆர்பிஐ விடுமுறை அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் நாளை 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தாெகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதாலும் நாளை ஏப்ரல்19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
மேலும் படிக்க: Bank Holiday: இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை..! மத்திய அரசு அறிவிப்பு..! |