தமிழ் திரையுலகில் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது விஜய் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். மேலும் இந்த கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக (Political Party Name) நேற்று அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார். இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் பல வருடங்களாகவே Acter Vijay அரசியலுக்கு வருவார் என பல தகவல்கள் வெளயாகின. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்த படாமல் இருந்தது. ஆனால் தற்போது இந்த தகவல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னரும் விஜய் மக்கள் இயக்கமானது பல வருடங்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து தான் வருகிறது. மேலும் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பல நிவாரண உதவிகள், சமூக சேவைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் போன்ற பல சேவைகளை செய்து வந்தது. எனினும் மக்களுக்கு முழுமையாக உதவ ஒரு தன்னார்வ அமைப்பால் முடியாது என்பதால் Vijay அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவந்தனர்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் விஜய் தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் (Vijay Katchi Name) சூட்டியுள்ளார். இந்நிலையில் இந்த பெயருக்கான காரணம் (Vijay Katchi Name Reason) தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி போன்ற 21 கட்சிகள் தமிழ், தமிழநாடு, தமிழகம் உள்ளிட்ட வார்த்தைகளை தங்களின் கட்சி பெயர்களாக கொண்டுள்ளன. இதன் காரணமாக தான் விஜய் தன் கட்சியின் பெயராக இதை அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: சினிமாவிலிருந்து விலகும் தளபதி விஜய்..! அறிவிப்பை வெளியிட்டார்..! |