HomeசினிமாThangalaan Movie Release Date: தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!

Thangalaan Movie Release Date: தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!

மாறுபட்ட தோற்றங்கள் மற்றும் மாறுபட்ட கதைக்களம் என புதுமைக்கு பேர் போனவர் தான் நடிகர் விக்ரம். இவர் நடித்து இறுதியாக வெளியான படம் தான் பென்னியின் செல்வன். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் தங்கலான் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார் மேலும் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். கடந்த ஓராண்டாக தங்கலான் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது கேஜிஎஃப்பில் வாழும் பூர்வகுடி தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது.

அதன் பிறகு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ஜனவரி 26-ம் தேதி சில காரணங்களால் தங்கலான் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பின்னர் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற தகவல் (Thangalaan Padathin Release Date) வெளியானது.

Thangalaan Movie Release

ஆனால் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் 26-ம் தேதி தங்கலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் (Thangalaan Movie Release Date) வெளியாகியுள்ளது. இது காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: தளபதி 69 படத்தில் மீண்டும் இணைகிறார்களா விஜய் திரிஷா..! வெளியான சூப்பர் அப்டேட்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular