Uyir Thamizhukku Release Date: தமிழ் சினிமாதுறையில முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வடசென்னை படத்தில் அவர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் (Uyir Thamizhukku Movie Update).
இந்த நிலையில் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு (Ameer Uyir Thamizhukku) என்ற படத்தில் கதாநாயகனாக அமீர் நடித்து உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜசிம்மன், சரவண சக்தி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த உயிர் தமிழுக்கு என்னும் படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆதம்பாவா திரைத்துறையில் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் வித்யாசாகர் இசையை கேட்க அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பார்பில் உள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரேய்லர் வெளியகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் காரணமாக படத்தின் நாயகனான இயக்குநர் அமீர் மற்றும் படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அரசியல் கதையம்சம் கொண்டுள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் கனெக்டாகும் எனவும் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
Uyir Thamizhukku படத்தின் வெளியாகும் தேதி குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் படி வரும் மே 10 ஆம் தேதி உயிர் தமிழுக்கு படம் (Release Date of Uyir Thamizhukku Movie) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.