பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து விட்டதாக நேற்று அவரது சமூக வலைதள பக்கங்களில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தி குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகை Poonam Pandey பாலிவுட்டில் பிரபலமான கேம் ஷோவான லாக் அப் என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் தான் நேற்று இவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக (Poonam Pandey Death News) தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த பதிவில் ‘அன்புக்குரிய பூனம் இன்று காலை உயிரிழந்து விட்டார். அவரை நாம் கருப்பை வாய் புற்றுநோயல் இழந்து விட்டோம். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பிரைவசி கொடுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவர் மாடலிங் துறையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடும் பதிவுகள் மூலம் அதிக விமர்சனங்களுக்கும் உள்ளனார். இவை ஒரு புறம் இருக்க இவர் இறந்த செய்தியின் போஸ்டின் கமெண்ட் செக்ஷனில் கூட, பலர் இவரை திட்டி தீர்த்து தான் வந்தனர்.
பிரபலமான பாலிவுட் நடிகை தான் இந்த பூனம் பாண்டே. இவர் நேற்று தனது 32-வது வயதில் உயிரிழந்து விட்டதாக (Poonam Pandey Death) அவரது சமூக வலைதள பக்கங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் இவர் கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவர் தற்போது உயிரிழக்க வில்லை என்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த தகவலை கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ பதிவில் தொடர்ந்து பேசிய அவர், தான் உயிருடன் தான் இருப்பதாகவும் கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக தான் உயிரிழக்கவில்லை (Poonam Pandey fake Death News) என்றும் கூறியிருக்கிறார். எனினும் கருப்பை வாய் புற்றுநோயால் ஆயிரக்கணக்கான பெண்களால் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த புற்றுநோய் பாதிப்பு தடுக்க வேண்டும் என்றும் இதனை தடுக்க HPV தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த நோய் பாதிப்பினால் இனி யாரும் உயிழக்க கூடாது என்றும் அவர் இப்பதிவில் கூறியுள்ளார். இறுதியில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பூனம் பாண்டே இப்படி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
#PoonamPandey faked her death to create awareness on Cervical Cancer!pic.twitter.com/fVGU3ypYBh
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) February 3, 2024
இதையும் படியுங்கள்: இதுனால தான் இந்த பெயரை விஜய் கட்சிக்கு தேர்வு செய்தாரா..! |