தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகின்றது. இந்நிலையில் தேர்தல் குறித்த செய்திகள் நாள்தோறும் நாம் பார்த்து வரும் வேளையில், பிரசாரங்களில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களில் திரைப்பட பாடல்கள் மற்றும் அவர்கள் கட்சிக்கென்று தனித்தனியான பாடல்கள் என்று பிரசார நேரங்களில் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிக்கப்பட்டு நம் காதுகளை துளைக்கும். இவ்வாறு இருக்கையில் நாம் தமிழர் கட்சியும் தமிழகத்தில் மக்களைவ தேர்தலில் போட்டியிடுகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களவை தேர்தலில் கூட்டணியுடன் களம் கண்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து (NTK lok sabha election 2024) போட்டியிடுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாேது நாம் தமிழருக்கு ஒதுக்கிய விவசாயி சின்னத்தை இந்த மக்களவை தேர்தலில் கொடுக்காததால், மைக் சின்னம் அவருக்கு கிடைத்தது. மைக் சின்னம் வேண்டாம் என கேட்டும் மைக் சின்னம் கிடைத்ததால் நாம் தமிழர் கட்சி மைக் சின்னதில் (NTK makkalavai therthal pracharam 2024) போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், அவர் நடித்த கோட் படத்தின் பாடல் நேற்று (vijay goat movie song) வெளியானது. அதில் மைக்கை கையில் எடுக்கட்டுமா? கேம்பையினை தொடங்கட்டுமா? போன்ற வரிகள் நாம் தமிழரின் மைக் சின்னத்திற்கு பொருந்துவது போல இருப்பதால், நாம் தமிழர் கட்சியினர் விஜயின் இந்த பாடலை தேர்தல் பிரசாரத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து விஜயின் சார்பில் எந்த தகவலும் பெறப்படவில்லை.