லைஃப்ஸ்டைல்

Republic Day 2024 Wishes in Tamil..! குடியரசு தின வாழ்த்துக்கள் 2024..!

நமது வலைதளத்தில் Republic Day 2024 Wishes in Tamil பற்றிய வாழ்த்துப்படங்களை பதிவிட்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது (75 Republic Day Wishes in Tamil). டெல்லியில் உள்ள செங்கேட்டையில் குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் மூவர்ணக் கொடி ஏற்றுவார். இதன் பிறகு குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.

இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் சுதந்திரம் கிடைத்தது. அதன் பிறகு அம்பேத்கார் தலைமையிலான குழு ஒன்று இந்திய மக்களுக்கான அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கியது. இந்த அரசியலமைப்பு சட்டம் ஆனது கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அன்றைய தினமே இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கேட்டையில் குடியரசு தலைவர் நமது தேசிய கொடியை ஏற்றுவார்கள். அதன் பிறகு முப்படையினர் குடியரசுத் தலைவருக்கும் மூவர்ணக் கொடிக்கும் மரியாதை தெரிவிக்கும் அணிவகுப்பினை நடத்துவார்கள். இதனை தொடர்ந்து இந்திய மாநிலங்களின் சிறப்பு அலங்கார ஊர்தியின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் இந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழாவினை கொண்டாடுவார்கள். குடியரசு தினத்தன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்த பதிவில் குடியரசு தின வாழ்த்துக்களை (Republic Day Wishes 2024 in Tamil) பதிவிட்டுள்ளாம். இதனை பயன்படுத்தி குடியரசு தினத்தன்று உங்கள் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் பகிருங்கள்.

Happy Republic Day Wishes

தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்.
தாயை நேசிப்போம்!
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!
வந்தேமாதரம்

75வது குடியரசு தின வாழ்த்துக்கள்

வேற்றுமையில் ஒற்றுமையும்,
பன்முக கலாச்சாரமும் நமது
தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன.
அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம்
என்று உறுதிமொழி ஏற்போம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்!

Republic Day Wishes 2024

குடியரசு தின வாழ்த்துக்கள் 2024

ஜனநாயகம் மலர்ந்த
இன்நன்னாளில் அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்..!

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

அனைவரும் சமம் என்ற
ஜனநாயக நாட்டில் வாழும்
இந்திய குடிமக்களுக்கு
குடியரசு தின வாழ்த்துக்கள்!

Happy Republic Day Wishes in Tamil

அடிமைப்பட்டு போன தாய் நாட்டை,
தன் இன் உயிரை துச்சம் என எண்ணி,
போராடி சுதந்திரத்தை பெற்று
தந்த தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்.
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

75th Republic Day Wishes in Tamil

75வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

எத்தனை மதம், எத்தனை மொழி,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,
இருந்தாலும், நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Republic Day 2024 Wishes in Tamil

அடிமைத்தனம் தீர்ந்த தினம்
அரசு அமைந்த தினம்
சுதந்திரம் பெற்று வளர்ந்த தினம்
இது குடியரசு தினம்

இனிய 75வது குடியரசு தின வாழ்த்துக்கள்

Republic Day Wishes in Tamil

குடியரசு தேசம் நம் தேசம்
நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

சமத்துவம் தொடர்ந்து,
சம உரிமை நீடித்து,
பாரதம் செழித்து,
மக்கள் வாழ்வு சிறக்க,
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

Republic Day Wishes Images

ஆகாய சாகஸம் ஆர்ப்பரித்து காணீர்..
அலங்கார அணிவகுப்பை கொடியசைத்து காணீர்.!
ஓர்வானம் ஓர்பூமி ஓர் மக்களாய் ஒன்றிணைவோம்..
பேரானந்தமிகு குடியரசுதினத்தினை போற்றிடுவோம் !

Republic Day Kavithai in Tamil

இந்திய நாட்டின்
அனைத்து
சொந்தங்களுக்கும்
இனிய குடியரசு
தின வாழ்த்துக்கள்..

குடியரசு தின வாழ்த்துக்கள் 2024

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்!
நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்!!

நமது நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு கொண்டு வந்த நாளையே இந்தியாவின் குடியரசு தினமாக நாம் கொண்டாடுகிறாம். இந்த அரசியல் சாசனம் அனைத்து மக்களையும் சமமாக பாவித்து நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. அதனாலேயே இது சிறப்பிக்கப்படுகிறது. இந்த குடியரசு தினத்தன்று உங்கள் வாழ்த்துக்களை (Republic Day Qutoes in tamil) அனைவருக்கும் பகிருங்கள்.

மேலும் படிக்க: Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

Republic Day – FAQ

1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா ஆவார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.

2. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார்?

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார்.

3. இந்திய தேசிய கொடியின் நீளம் அகலத்தின் விகிதம் என்ன?

இந்திய கொடி பற்றிய சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன் படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். தேசிய கொடி எந்த அளவில் இருந்தாலும், அதன் நீளம் உயரம் (அகலம்) விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago