Homeசெய்திகள்ரிஷப் பண்டுக்கு 12 லட்சம் அபராதம்..! இது தான் காரணமா?

ரிஷப் பண்டுக்கு 12 லட்சம் அபராதம்..! இது தான் காரணமா?

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அனைத்து அணிகளும் தனது சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இந்த வகையில் தான் நேற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 191 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பிறகு இரண்டாவதாக சென்னை அணி பேட்டிங் செய்தது. சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது.

இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் (Rishabh Pant Fine) வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் கேப்டன் ரிசப் பண்டுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இது ஐபிஎல் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே டெல்லி அணியின் கேப்டன் ரிசப் பண்டுக்கு 12 லட்சம் அபராதம் (Rishabh Pant Fine Issue) விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அமைப்பில் இந்த முடிவு டெல்லி அணி மற்றும் ரிசப் பண்டின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishabh Pant Fine Issue
இதையும் படியுங்கள்: தோனியின் பல வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular