இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் (IPL 2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே பாேட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவர் இன்று தனது 100-வது போட்டியில் விளையாடவுள்ளார். இந்த வீரர் யார் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாடுபவர் என்பது குறித்த தகவல்களை இப்பதிவல் பார்க்கலாம்.
நம் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் தான் ரிசப் பந்த். இந்திய அணியின் முக்கிய வீரராகவும் உள்ளார். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு மிகப்பெரிய கார் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஐபிஎல் சீசன் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் விளையாட்டு போட்டிகளுக்கு திரும்புவதற்கான உடற்திறன் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பிறகு இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி தற்போது நடைபெறும் போட்டிகளில் ரிசப் பந்த் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது ஐபிஎல் 2024-ன் ஒன்பதாவது போட்டியாகும். இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டஸ் அணிக்காக 100-வது போட்டியில் (Rishabh Pant 100 Match in IPL) விளையாடவுள்ளார்.
இந்த தகவல் ரிஷப் பண்ட்டின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தனது நூறாவது போட்டியில் ரிசப் பண்ட் வெற்றிப்பெறுவாரா என்றும் இந்த போட்டியில் சதம் அடிப்பாரா என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: IPL 2024: அதிரடியாக கேப்டன்களை மாற்றிய அணிகள்..! |