பல வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்தவர் தான் MS Dhoni. இவர் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டார். இவர் இந்திய அணிக்காக தனது சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி பல கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இவர் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியது முதல் தனது கடைசி போட்டி வரை அனைத்திலும் தனது முழு பங்களிப்பை அளித்துள்ளார். இவர் இந்திய அணியில் விளையாடிய போது பலவிதமான சாதனைகளையும் படைத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது இவரின் ஒரு சாதனையை முறியடிக்க (Dhoni record) இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா (Rohit Sharma) தயாராகி வருகிறார். இந்த தகவல் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
எம். எஸ். தோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 298 இந்திய வெற்றிக்காக பங்காற்றி உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 377 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 336 வெற்றிகளுடன் இலங்கை அணியை சேர்ந்த மஹேல ஜயவர்தன உள்ளார். நம் இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி 313 வெற்றிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி 298 வெற்றிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 297 வெற்றிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டிகள் மொத்தம் 5 போட்டிகளை கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. இரண்டு போட்டிகள் மீதம் உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை ரோகித் சர்மா (Rohit Sharma break Dhoni record) முறியடிப்பார். எனவே ரோகித் சர்மாவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) | 377 |
மஹேல ஜயவர்தன (இலங்கை) | 336 |
விராட் கோலி (இந்தியா) | 313 |
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | 307 |
ஜாக் காலிஸ் (தென் ஆப்ரிக்கா) | 305 |
குமார் சங்கக்கார (இலங்கை) | 305 |
எம்எஸ் தோனி (இந்தியா) | 298 |
ரோஹித் சர்மா (இந்தியா) | 297 |
இதையும் படியுங்கள்: சிஎஸ்கேவில் தோனியின் சம்பளம் இத்தனை கோடியா? |