இந்த 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் (IPL 2024) கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஆரம்பம் முதலே பாேட்டிகள் அனைத்தும் சுவாரஸ்யமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. எந்த அணியும் குறை கூறும் அளவுக்கு இல்லை. அனைத்து அணிகளும் தனது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவர் தற்போது தனது 250-வது போட்டியில் விளையாடவுள்ளார். இந்த வீரர் யார் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாடுபவர் என்பது குறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா (Rohit Sharma) தான் தற்போது தனது 250-வது ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார். இவர் ஐபிஎல்லில் (Rohit Sharma in IPL) மும்பை அணிக்காக விளையாடிவருகிறார். இந்த சீசனில் இதுவரை மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் இன்று மும்பை அணி இந்த சீசனின் ஏழாவது போட்டியில் பஞ்சாப் அணியை ஏதிர்க்கொள்ள உள்ளது. இந்த போட்டி மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் 250-வது போட்டி ஆகும். இந்த சீசனில் ஆரம்பத்தில் மும்பை அணி மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினாலும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது.
எனவே இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுமா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த போட்டி ரோகித் சர்மாவின் 250-வது போட்டி என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மும்பை அணியின் ரசிகர்கள் இந்த போட்டியில் ரோகித் சர்மா (Mumbai Indians Player Rohit Sharma) எவ்வாறு விளையாடுவார் என்றும் சதம் அடிப்பாரா என்றும் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடியுள்ள 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி 256 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மா நன்றாக விளையாடுவார் என்று எதிர்பாரக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: மனம் திறந்து பேசிய தோனி… தல மனதை கவர்ந்த சென்னை ரசிகர்கள்..! |