பாதுகாப்பு படையில் வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கணவாக இருக்கும் இதுபோல இருப்பவர்களுக்காக தான் தற்போது ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருடம் அதிக அளவிலான காலிப்பணியிடங்களுடன் RPF Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த பதிவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம்.
ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Sub-Inspector மற்றும் Constable உள்ளிட்ட 4660 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான RPF Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த RPF ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த RPF Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு வேறுபட்ட பதவிகள் நிரப்பபட்படவுள்ளதால் கல்வித்தகுதி வேறுபடுகிறது. இதன் படி Sub-Inspector பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Constable பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railway Protection Force (RPF) Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Constable and Sub-Inspector என இரண்டு விதமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://rpf.indianrailways.gov.in/-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு Computer Based Test நடைபெறும் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மெரிட் லிஸ்ட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பிறகு Physical Efficiency Test & Physical Measurement Test, Document Verification, Interview மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க SC/ST/ESM/பெண்/சிறுபான்மையினர்/EBC பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250 இதர பிரிவினருக்கு ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RPF Constable and Sub-Inspector Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 15.04.2024 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (RPF Constable Vacancy 2024 Last Date) 14.05.2024 என்று தகவல் வெளியாகியுள்ளது. RPF துறையில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (RPF Constable Vacancy 2024) 4660 பணியிடங்கள் ஆகும்.
இந்த Railway Job பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்த படசம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 28-வயதிற்கு மேல் இருக்ககூடாது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Constable பணிகளுக்கான சம்பளம் 21,700 முதல் 35,400 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த RPF Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
Railway Job: ரயில்வே பாதுகாப்பு படையில் 4660 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! 10வது,டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!
ரயில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 4660 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 21700-35400
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-02
Posting Expiry Date: 2024-05-14
Employment Type : FULL_TIME
Hiring Organization : Railway Protection Force
Organization URL: www.indianrailways.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Room No. 256-D, Rail Bhawan, New Delhi, Delhi, 110001, India
Education Required:
- High School
- Bachelor Degree
இதையும் படியுங்கள்: 10வது படித்தவர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ரூ .21,700/- முதல் ரூ .81,100/- சம்பளத்துடன் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்..! |