Homeவேலைவாய்ப்பு செய்திகள்இந்திய ரயில்வேயில் 9144 காலிப்பணியிடங்கள்..! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்திய ரயில்வேயில் 9144 காலிப்பணியிடங்கள்..! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்திய ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை பலரிடம் இருக்கும். இதற்கான ஒரு வாய்ப்பாக தான் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது RRB Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முறை அதிக அளவிலான எண்ணிக்கையில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

ரயில்வே துறையில் காலியாக உள்ள Technician Grade காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான RRB Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த RRB ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக Technician Grade-I, Technician Grade-II ஆகிய இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த RRB Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway Recruitment Board வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள Technician Grade பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் (Railway Recruitment 2024 Apply Online) விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான (RRB Official Website) www.rrbchennai.gov.in-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு ஐந்து நிலைகளில் தேர்வு முறை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முதல் நிலையில் First Stage CBT (CBT-1) நடைபெறும். அதன் பிறகு Second Stage CBT (CBT-2) பின்னர் Computer Based Aptitude Test (CBAT) நடைபெறும். இந்த நிலைகளில் தேர்வானவர்களுக்கு Document Verification (DV) மற்றும் Medical Examination (ME) நடைபெறும். இந்த தேர்வுகளில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவர்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக SC, ST, ESM, PwBD, திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு ரூபாய் 250 மற்றும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 09.03.2024 முதல் 08.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே துறையில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (Railway Recruitment 2024 Vacancy) 9144 பணியிடங்கள் ஆகும்.

Railway Recruitment 2024 அறிவிப்பின் படி இரண்டு விதமான பதவிகள் நிரப்பப்பட உள்ளது. எனவே பதவிகளுக்கு ஏற்றார்போல் வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி Technician Grade –I பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்த படசம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 36-வயதிற்கு மேல் இருக்ககூடாது. அதேபோல Technician Grade –II பதவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 33 வரை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான சம்பளம் 19,900 முதல் 29,200 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த RRB Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

[rank_math_rich_snippet id=”s-023d9ddf-ec69-4eeb-8cf7-953add4eb155″]

இதையும் படியுங்கள்: DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular