Homeஆன்மிகம்Rudraksha சிவபெருமானின் பிரசாதம்.. நாம் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்..!

Rudraksha சிவபெருமானின் பிரசாதம்.. நாம் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்..!

சிவபெருமானின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ருத்ராட்சம் (Rudraksha) இந்து மதத்தின் படி ஒரு புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த ருத்ராட்சம் ஆனது மரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது சிவபெருமானின் பிரசாதமாக கருதப்படுகிறது.

சிவபக்தர்கள் இந்த ருத்ராட்சத்தை மாலையாக (Rudraksha Mala) அணிந்திருப்பார்கள். சிலர் இந்த ருத்ராட்சத்தை கையில் பிரஸ்லேட்டாக (Rudraksha Bracelet) மற்றும் சிலர் ஒரு ருத்ராட்ச கொட்டையை மட்டும் டாலர் போல அணிந்திருப்பார்கள். இந்த ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவர்கள் சாமியாராக போய்விடுவார்கள் என இன்றளவும் நம்பப்படுகிறது.

இந்த ருத்ராட்ச மாலையை பல நன்மைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. ஒருவர் ஏழேழு ஜென்மங்கள் புண்ணியங்கள் செய்திருந்தால் மட்டுமே இந்த ருத்ராட்ச மாலையை அணிய முடியும் என சிவாகம நூல்கள் கூறுகிறது. இந்த சிவ வழிபாட்டில் ருத்ராட்சத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இதனை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

ருத்ராட்சம் என்றால் என்ன? (What is Rudraksha)

ருத்ராட்சம் என்பது ஒரு ருத்ராட்ச மரத்தில் (Elaeocarpus Ganitrus Roxb, Rudraksha) இருந்து உருவாக்ப்படுவது ஆகும். பெரும்பாலும் இந்த மரங்கள் தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட ஒரு சில பட்டகளில் தான் காணப்படுகின்றன. ஜாவா, கொரியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகள் தைவான், சீனா போன்ற பகுதிகளிலும் இந்த ருத்ராட்ச மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் உயர்ந்த மலைகள், குளிர் தண்ணீரிலும் மற்றும் மிதமான சூழ்நிலைகளிலும் செலிப்பாக வளர்கின்றன.

ருத்ராட்சம் உருவான வரலாறு (History of Rudraksha)

சிவபெருமானின் கண்ணீரில் தான் ருத்ராட்சம் தோன்றியது என சிவபுராணம் கூறுகிறது. இந்த ருத்ராட்சம் என்ற பெயர் ஆனது சிவபெருமானின் கண்களை குறிப்பதாக கூறப்படுகிறது.

உலகின் நன்மைக்காகவும் உலகில் வாழும் உயிரினங்களுக்காகவும் சிவபெருமான் பல்லாண்டு காலம் தவம் செய்தார். சிவன் தியானத்தில் இருந்து எழுந்த போது அவர் கண்களில் இருந்து சூடான கண்ணீர் துளிகள் உருண்டோடின. இந்த துளிகளை பூமித்தாய் ருத்ராட்ச மாக மாற்றினர். இதுவே ருத்ராட்சம் உருவான வரலாறு கதை ஆகும்.

History of Rudraksha

ருத்ராட்சம் முகங்கள்

ருத்ராட்சத்தில் உள்ள அழுத்தமான கோடுகள் தான் ருத்ராட்சம் முகங்கள் என அழைக்கப்படுகின்றன. ஐந்து கோடுகள் இருந்தால் அது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் ஆகும். அதேபோல் ஏழு கோடுகள் இருந்தால் அது ஏழு முகம் கொண்ட ருத்ராட்சம் ஆகும். ருத்ராட்சத்தில் எத்தனை முகம் இருக்கும் என்பதை அறிவதற்கு முன் அனுபவம் இருக்க வேண்டும் என்பது தேவை இல்லை.

சாதாரணக் கண்கள் மூலம் பார்த்தாலே ருத்ராட்சத்தில் எத்தனை முகம் இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மொத்தம் 1 முதல் 21 வரையிலான ருத்ராட்ச முகங்கள் உள்ளன. இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியது.

ஏகமுகி மற்றும் பஞ்சமுகி

ருத்ராட்சம் பல வகைப்படும். இந்த ருத்ராட்சத்தில் மிகவும் சிறந்தது ஏகமுகி மற்றும் பஞ்சமுகி ஆகும். இந்த பஞ்சமுகி (Panchmukhi Rudraksha) மற்றும் ஏகமுகி ஆகிய இரண்டு ருத்ராட்சத்தை தான் அனைவரும் அணிந்து கொள்ள பெரிதும் விரும்புகின்றனர்.

ருத்ராட்சம் அள்ளி தரும் பலன்கள் (Rudraksha Benefits in Tamil)

ருத்ராட்சத்தில் உள்ள முகங்கள் அடிப்படையில் இந்த ருத்ராட்ச மணிகள் வகைப்படுத்தப்படுகின்றன. அதேபோல் அந்த முகங்கள் அடிப்படையில் அந்த ருத்ராட்சங்கள் அதனை அணிபவர்களுக்கு பலன் தருகின்றன. அவற்றை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒரு முகம் ருத்ராட்சம்

ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் தான் ஏகமுகி (Ek Mukhi Rudraksha) என அழைக்கப்படுகின்றன. இந்த ஏகமுகி ருத்ராட்சம் அணிபவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த ஏகமுக ருத்ராட்சம் ஆனது சூரியனின் அதிர்வை பெறுகிறது என்று கூறப்படுகிறது. இந்த ருத்ராட்சம் இதைய நோயை குணப்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ருத்ராட்சம் தோல் நோயை நீக்கும், வலது கண் தலைவலியை போக்கும் மற்றும் சுவாச கோளாறுகளை போக்கும் என கூறப்படுகிறது.

Rudraksha Chain

இரு முகம் ருத்ராட்சம்

இரு முகம் ருத்ராட்சம் என்பது இரண்டு கோடுகள் இருக்கும். இந்த இரு முக ருத்ராட்சத்தில் சந்திரனின் ஆதிக்கம் இருக்கும். இந்த ருத்ராட்சங்களை அணிபவர்களுக்கு சுவாச கோளாறு பிரட்சனைகள் குறையும். மேலும் இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு, மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இந்த இரு முக ருத்ராட்சத்தை அணியலாம் என கூறப்படுகிறது.

மூன்று முகம் ருத்ராட்சம்

காது, கழுத்து சம்பந்தபட்ட நோய்களை உடையவர்கள், குடற்பண், எலும்பு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் ரத்த சம்பந்தமான நோய் உடையவர்கள் இந்த மூன்று முக ருத்ராட்சத்தை அணியலாம். மேலும் இந்த மூன்று முக ருத்ராட்சத்தில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

நான்கு முகம் ருத்ராட்சம்

புதன் கிரகம் தான் நான்கு முக ருத்ராட்சம் ஆதிக்கம் செய்யும் கோல் ஆகும். இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் வாதம் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இந்த ருத்ராட்சம் பிசினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது.

ஐந்து முகம் ருத்ராட்சம்

பாதம், கல்லீரல், தொண்டை, கணையம் மற்றும் எலும்பு மஜ்ஜை தொடர்பான வியாதிகளை போக்க வல்லது இந்த ஐந்து முக ருத்ராட்சம். இந்த ருத்ராட்சம் ஆனது சிவபெருமானை குறிக்கும். இந்த ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச மாலையை அணிபவர்களுக்கு உடல் நலம் மற்றும் அமைதி ஆகியவை கிடைக்கும். இந்த ருத்ராட்ச மாலை ஆனது ஜபம் செய்வதற்கு பயன்படுகிறது. இதுவே ஐந்து முக ருத்ராட்சத்தின (5 Face Rudraksha Benefits in Tamil) நன்மைகள் ஆகும். மேலும் இது குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.

ஆறு முகம் ருத்ராட்சம்

இந்த ஆறு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு வாய்ப்புண் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற பிரட்சனைகள் நீங்கும். மேலும் இசையில் மீதான ஈர்ப்பு ஏற்படுத்தும். மேலும் இதை அணிபவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி ஏற்படும்.

ஏழு முகம் ருத்ராட்சம்

இந்த ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிந்தால் மரண பயம் போகும். ஆயுளை நீட்டிக்கும், இடுப்புக்கு கீழே உள் பகுதியில் நோய் நீங்கும், மன கவலைகளை நீக்கும், உடலில் உள்ள விசத் தன்மையை போக்கும் மேலும் மதுவுக்கு அடிமையானவர்களை விடுவிக்கும் என கூறப்படுகிறது. இந்த ருத்ராட்சம் ஆனது சனியின் ஆதிக்கம் பெற்றது ஆகும்.

எட்டு முகம் ருத்ராட்சம்

ராகு கிரகத்தின் ஆதிக்கம் இந்த எட்டு முக ருத்ராட்சத்திடம் இருக்கிறது. கண், கால், சருமம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் நீங்கும். நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் திடீர் பிரச்சனைகள் போன்றவை நீங்கும்.

ஒன்பது முகம் ருத்ராட்சம்

ஒன்பது முகம் கொண்ட ருத்ராட்சம் ஆனது கண் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். மேலும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தீரும் என நம்பப்படுகிறது. இந்த 9 முகம் கொண்ட ருத்ராட்சம் ஆனது கேது பகவானின் ஆதிக்கம் நிறைந்த ருத்ராட்சம் ஆகும்.

Rudraksha Bracelet for Men
மேலும் படிக்க: Kolaru Pathigam Lyrics in Tamil: வாழ்வின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் கோளறு பதிகம்..!

பத்து முகம் ருத்ராட்சம்

இந்த பத்து முகம் கொண்ட ருத்ராட்சம் ஆனது கோள்களினால் ஏற்படும் தீய பலன்களை இது தடுக்கும் என நம்பப்படுகிறது. இது எல்ல கோள்களையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

பதினோரு முகம் ருத்ராட்சம்

இந்த பதினோராவது முக ருத்ராட்சம் ஆனது தியானம் செய்பவர்களுக்கு மிகவும் உதவும். மேலும் இந்த ருத்ராட்சம் அனுமனை குறிக்கும். இதை அணிபவர்கள் பயம் இல்லாதவராக இருப்பார்கள்.

மொத்தம் 38 வகை ருத்ராட்சம் இந்த பூமியில் இருக்கிறது. அதில் குறிப்பாக 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சம் இவை எல்லாமல் அபூர்வமாகக் கிடைக்கின்றன. அதேபோலவே 12 முதல் 21 வரையிலான ருத்ராட்சம் ஆனது மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன என கூறப்படுகிறது.

ருத்ராட்சம் அணியும் முறைகள்

  • ருத்ராட்சம் அணிபவர்கள் அதற்கு வாரத்திற்கு ஒரு முறை பூஜை செய்ய வேண்டும்.
  • குறிப்பாக பிரதோஷம் மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் ருத்ராட்சத்திற்கு பூஜை செய்ய வேண்டும்.
  • ருத்ராட்சத்தை கருப்பு நிற நூலில் அணியக்கூடாது. சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை நிற நூலில் தான் அணிய வேண்டும்.
  • 108 ருத்ராட்சம் கொண்ட மாலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதை பூஜை செய்து அணிந்து கொள்ள வேண்டும்.
  • மது அருந்தும் போது ருத்ராட்சம் அணிந்திருக்க கூடாது.
  • இறுதி ஊர்வலம் செல்லும் போது அணிய கூடாது.
  • அசைவ உணவு சாப்பிடும் போது ருத்ராட்சம் அணிந்திருக்க கூடாது.

இவ்வாறு ருத்ராட்ச மாலை அணிவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவான இந்த ருத்ராட்சம் சிவனின் பிரசாதம். இதனை அணிபவர்களுக்கு சிவபெருமானின் அருளும் ஆசிர்வாதமும் என்றும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பதிவின் மூலம் ருத்ராட்சம் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த ஆன்மிக தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.

மேலும் படிக்க: Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வரலாறு…!

Rudraksha – FAQ

1. எந்த நட்சத்திரத்திற்கு எந்த முகம் ருத்ராட்சம் அணியலாம்?

ஒவ்வொரு ராசிக்கு, நட்சத்திரத்திற்கு ஏற்றார் போலவும் ருத்ராட்சம் அணியும் வழக்கம் உள்ளது. அதன் படி பரணி – ஆறுமுகம் மற்றும் 12 ஆம் முகம், அஸ்வினி – ஒன்பது முகம், கார்த்திகை – பனிரெண்டு முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்.

2. ருத்ராட்சத்தை கயிற்றுடன் மட்டுமே அணிய வேண்டுமா?

இல்லை, ருத்ராட்சத்தை தங்கம், வெள்ளி கொண்டு செய்யப்படும் செயின்களிலும் போட்டுக் கொள்ளலாம்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular