மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக (Parliament Election 2024) நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று நிறைவடையும் நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி முக்கிய (Election commission Rules) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறவுள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 19 வாக்கு பதிவு நடைபெற்ற தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் முடிவடைகிறது. இந்தியா முழுவதும் வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு (Therthal Prachara Timing) பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வுக்கு பிறகு அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தமிழக தலைமை தேர்தல் ஆணையத் (Election commission of Tamil Nadu) தலைவர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் எதுவும் நடைபெற கூடாது.
தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. இந்த தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் அல்லாதவர்கள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதியில் இருக்க கூடாது எனவும், தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் தொகுதியை விட்டு (Therthal Aanaiyam Vithigal) வெளியேற வேண்டும் எனவும் தமிழக தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரதா சாகு (Sathya Pratha Sahoo) அறிவித்துள்ளார்.