இன்றைய காலகட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்திய முழுவதும் மெஹந்தி வைப்பது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. முன்பெல்லாம் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் மெஹந்தி வைப்பார்கள் ஆனால் இப்போது அடிக்கடி வைப்பது வழக்கமாகிவிட்டது. நாளை முதல் லோக் சபா தேர்தல் (Election 2024) தொடங்வுள்ளது. அதில் முதல்கட்டமாக நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தான் தேர்தலில் வாக்களிக்கும் போது மெஹந்தி மற்றும் மருதாணி போன்றவை வைத்திருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதனால் மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இந்த தகவலுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அவர் கூறுகையில் இது முற்றிலும் அதாரமற்ற செய்தி என்றும், இந்த காலத்தில் மருதாணி இடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. பல பெண்கள் இதனை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே இது எப்போது சாத்தியபடாது என்று அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் மெஹந்தி போடுவது என்பது பலரது வழக்கமாக உள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பரவும் செய்தி முற்றிலும் போலியானது என்றும் அவர்கூறியுள்ளார். மேலும் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளில் பெயர் இருந்தால் மட்டும் போதுமானது என்றும், எனவே வாக்கு சாவடிக்கு தகுந்த ஆவணங்களுடன் சென்று வாக்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல உதவும் வாகனம்… அறிவித்த தேர்தல் ஆணையம்… |