உலகம் முழுவதும் உள்ள அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கியமான ஒன்று தான் இந்த GMAIL. இது மிகவும் பிரபலமான செயலி மற்றும் பல வருடங்களாக நடைமுறையில் உள்ள ஒரு செயலி ஆகும். இதனை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்ற நிலை தான் தற்போது உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது GMAIL இனி வேலை செய்யாது (Gmail Not Working) என்று தகவல் வெளியாகியது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில் ஒரு ஸ்கிரீன்ஷாட் பதிவு பரவி வருகிறது. இந்த பதிவில் ஜிமெயில் சேவையானது வரும் 2024 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தங்களது அதிகாரப்பூர்வ சேவையை நிறுத்தி அஸ்தமனமாக (Gmail Not Work) உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ள ஜிமெயில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவலுக்கு கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்த விளக்கத்தின் படி ஜிமெயிலின் அஸ்தமனம் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது. கூகுள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஒருபோதும் நிறுத்தாது. மேலும் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்களைப் பாதுகாப்பாக உள்ளது என உறுதி அளித்துள்ளது. இந்த தகவலை (Gmail Not Working Fake News) பார்த்த பிறகு தான் பலரும் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் Basic HTML View என்ற ஆப்ஷன் மட்டும் தான் ஜிமெயிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் தரையிறங்கிய முதல் அமெரிக்க விண்கலம்..! |