Homeசெய்திகள்சபரிமலை பங்குனி மாத பூஜை..! ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

சபரிமலை பங்குனி மாத பூஜை..! ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐயப்பன் கோவில் நடை மலையாள மாதத்தின் பிறப்பு, மண்டல பூஜை, விஷூ, ஓணம் பண்டிகை, மகரவிளக்கு பூஜை மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் நடை திறக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு (Sabarimala Kovil Nadathurappu 2024) பூஜைகள் நடைபெறும். மேலும் இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் பங்குனி மாத பூஜைகள் மற்றும் ஆராட்டு விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை (மார்ச் 13) மாலை 5 மணிக்கு மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்தவுள்ளார். மேலும் (மார்ச் 14) தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், தீபாராதனை, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, அத்தாழ பூஜை, உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம், உள்பட பூஜைகள் நடைபெறும்.

அதனை தொடர்ந்து சபரிமலை பங்குனி உத்திர விழாவை (sabarimala kovil panguni uthiram date 2024 in tamil) முன்னிட்டு வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியேற்றத்தை தொடங்கி வைக்கிறார். அன்றிலிருந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.

10-ஆம் நாள் திருவிழா வரும் 25 தேதி நடைபெறும். அன்றைய தினம் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆராட்டு விழாவில் (sabarimala kovil arattu vizha in tamil) அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துக்கொண்டு ஐயப்பனை கண் குளிரக்கண்டு தரிசிப்பார்கள். பெண்களும் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டாடப்படுவதுதான் இந்த ஆராட்டு விழா.

ஆராட்டு விழா அன்று சபரிமலையில் இருந்து ஐயப்பன் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு 3 மணி நேரம் வைக்கப்பட்டு பெண்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். அன்றை தினம் ஆராட்டு விழா நிறைவு பெற்று மாலையில் கொடி இறக்கப்படும். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். பங்கு மாத பூஜைகள் மற்றும் உத்திர விழாவும் சேர்ந்து வருவதால், 12 நாட்கள் கோவில் நடை (Sabarimala temple opening dates 2024 In Tamil) திறந்திருக்கும்.

Sabarimala temple opening dates 2024 In Tamil

இந்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்பவர்கள் மட்டும் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வதற்கு sabarimalaonline என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்..! அறிவித்தது கேரள அரசு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular