இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று தான் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை. இந்த கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை தொடங்கியது. அன்று முதல் டிசம்பர் மாதம் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெற்றது.
அதற்கு பிறகு டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதியுடன் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனத்துடன் நிறைவடைந்தது. இதனால் கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில் தான் இப்போது சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக திறக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கோவிலின் நடை இன்று திறக்கப்படுகிறது. ஏனெனில் நாளை அதிகாலை முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்றும் இது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சபரிமலை சீசனின் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான கூட்டம் வந்தது. இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்கு பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் இந்த சீசனில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் (Sabarimalai Ayyappan Kovil) இன்று மாலை 5.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்படவுள்ளது. மேலும் இன்று பூஜைகள் ஏதும் நடத்தப்படாது திறந்த நடையானது மீண்டும் கோயில் நடை அடைக்கப்பட்டு மறுநாள் பிப்ரவரி 14-ம் தேதி காலை நடைதிறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பிறகு பூஜைகள் நடத்தப்பட்டும் என்றும் காலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் Sabarimala கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பேருந்துகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதையும் படியுங்கள்: காதலர் தினத்தில் செல்ல வேண்டிய கோவில்..! மறக்காம போயிட்டு வாங்க..! |