SACON Coimbatore Recruitment 2024: பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலிம் அலி மையம் (SACON) பல்வேறு உதவியாளர் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் இரண்டு வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து உயிரியல் அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்.
SACON Coimbatore velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (SACON Coimbatore Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப் லைன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய drive.google.com லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் இந்த பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2024 முதல் 15.05.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.sacon.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த பணிகளை பற்றிய முக்கிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து www.sacon.in/careers தெரிந்துக்கொள்ளுங்கள்.
[rank_math_rich_snippet id=”s-57c8cdec-f439-42e0-9df0-3746925c7e9d”]