SAIL Recruitment 2024: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ( SAIL ) என்பது இந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் . இது மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
SAIL Recruitment 2024 அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எக்சிகியூட்டிவ், நான்-எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மூத்த ஆலோசகர், ஆலோசகர்/Sr மருத்துவ அதிகாரி வைத்திய அதிகாரி, மருத்துவ அதிகாரி (OHS), உதவியாளர் மேலாளர் (பாதுகாப்பு) , ஆபரேட்டர் மற்றும் டெக்னீஷியன் (கொதிகலன்), உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (கொதிகலன்), மைனிங் ஃபோர்மேன், சர்வேயர், ஆபரேட்டர் மற்றும் டெக்னீசியன் பயிற்சியாளர் [சுரங்கம்] , ஆபரேட்டர் மற்றும் டெக்னீஷியன் டிரெய்னி [எலக்ட்ரிக்கல்] , சுரங்க துணை ஆகிய பதவிகளுக்கு (Sail Velai Vaippu 2024 Notification) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பதவிகளுக்கு கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் 10வது, I.T.I, டிப்ளமோ, MD/ MS/ DNB, முதுகலை, MBBS, BE/ B.Tech, முதுகலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ( SAIL ) அதிகாரப்பூர்வ இணையதளமான www.sail.co.in பார்வையிடவும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க sailcareers.com என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 41 வரை இருக்க வேண்டும். இந்த SAIL Recruitment 2024 in Tamil அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள பொகாரோ – ஜார்கண்ட்யில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த பதவிகளுக்கு (sail job vacancy 2024 details in tamil) விண்ணப்பிக்க கட்டணம் பதவிகளுக்கு ஏற்றார் போல தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
- நிர்வாகிக்கு (E-1 முதல் E-4 வரை) பதவிக்கு கட்டணம்
பொது, EWS, OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 700/-
SC/ST/PwBD/ESM விண்ணப்பதாரர்கள்: ரூ. 200/-
- கிரேடு S-3 இல் உள்ள பதவிகளுக்கு கட்டணம்
பொது, EWS, OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 500/-
SC/ST/PwBD/ESM விண்ணப்பதாரர்கள்: ரூ. 150/-
- கிரேடு S-1 இல் உள்ள பதவிகளுக்கு கட்டணம்
பொது, EWS, OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 300/-
SC/ST/PwBD/ESM விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். SAIL Recruitment 2024 அறிவிப்பின் படி உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 16.04.2024 முதல் 17.05.2024 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஊதியம் Rs. 25,070 – Rs.2,40,000/ வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ, டிகிரி முடித்தவரா நீங்கள்? மத்திய அரசு வேலை தயார்..! SAIL நிறுவனம் 108 காலியிடங்களை வெளியிட்டுள்ளது..!
SAIL Recruitment 2024 அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Salary: 25070-240000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-08
Posting Expiry Date: 2024-05-17
Employment Type : FULL_TIME
Hiring Organization : Steel Authority of India Limited
Organization URL: www.sail.co.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, BOKARO STEEL PLANT BOKARO STEEL CITY, BOKARO, JHARKHAND , 827001, INDIA
Education Required:
- High School
- Professional Certificate
- Postgraduate Degree
மேலும் படிக்க: Degree முடித்துவிட்டு அரசு வேலை தேடுபவரா நீங்க? SEBI அருமையான வாய்ப்பை வெளியிட்டுள்ளது.. |