Homeசினிமாசலார் திரைப்படத்தின் விமர்சனம்..! Salaar Movie Review in Tamil..!

சலார் திரைப்படத்தின் விமர்சனம்..! Salaar Movie Review in Tamil..!

பாகுபலி என்னும் வெற்றி திரைப்படம் மூலம் நமக்கு நன்கு பிரபலமானவர் தான் பாகுபலி பிரபாஸ். இத்திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகவும் முன்னனி நடிகராகவும் மாறினார். அதேபோல் கே.ஜி.எஃப் என்னும் மெகாஹிட் திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் இயக்குநர் பிரசாந்த் நீல்.

தற்போது இந்த சூப்பர் ஹிட் காம்போ இணைந்து புதிய படத்தினை இயக்கி அந்தபடம் தற்போது திரையில் வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டு உள்ளது. அந்த திரைப்படம் தான் பாகுபலி பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார். இப்பதிவில் Salaar Movie Review பற்றி பார்க்கலாம்.

கதைசுருக்கம்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் தன் அம்மாவுடன் (ஈஸ்வரி ராவ்) வசித்து வருகிறார் தேவா (பிரபாஸ்). எந்த விதமான வன்முறையில் ஈடுபட மாட்டேன் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.

இப்படத்தில் மெக்கானிக்கான பணிபுரியும் தேவா மிகவும் அமைதியான குனம் கொண்டவர். இந்த நிலையில் தான் ஆபத்தில் சிக்கியுள்ள கதாநாயகியான ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தேவாவுக்கு வருகிறது. அதோடு அவன் வாழ்வில் வன்முறையும் வந்து விடுகிறது.

இதற்கு மத்தியில் கன்சார் என்னும் நகரில் தன்னுடைய வாரிசாக தன்னுடைய மகன் வர்தாவை (ப்ரித்விராஜ்) அறிவிக்க ஏற்பாடு செய்கிறார் ராஜா மன்னார் (ஜெகபதி பாபு). ஆனால் இந்த முடிவை மன்னாரின் அமைச்சர்களும், ஆலோசகர்களும் எதிர்த்து சதி செய்கின்றனர்.

இதைனை தொடர்ந்து பல பிரச்சனைகள் நடக்கிறது. இந்த நேரத்தில் தான் தன்னுடைய சிறுவயது நண்பனான தேவாவை அழைக்கிறார் வர்தா. இந்நிலையில் வன்முறையே வேண்டாம் வாழ்ந்து வந்த கதாநாயகன் தேவா கன்சார் நகரத்திற்கு வந்து பிரச்சனையில் சிக்கியுள்ள தனது சிறுவயது நண்பன் வர்தாவை காப்பாற்றுவாரா என்பதை இந்த கதை செல்கிறது.

Salaar Movie Review

படத்தின் சிறப்பு அம்சங்கள்

இந்த கதையினை கன்சார் நகரில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கியிருக்கியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல். அது மட்டுமின்றி இந்த கதைக்கு அந்த நகரத்தை மிகவும் அருமையாக உருவாக்கியிருக்கிறார் இவர்.

இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரை அலறவிடுகிறது பிரபாஸின் நடிப்பு. மேலும் இப்படத்தில் அவர் பேசும் பன்ச் வசனங்களும் நன்றாக உள்ளது. இப்படத்தின் முதல் பாதியில் தேவா யார் என்பதை முழுமையாக விலகியுள்ளார். இப்படம் மீண்டும் கே.ஜி.எப். படத்தை நினைவூட்டுகிறது.

இப்படத்தில் தேவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார் என்பதை விட வாழந்துள்ளார் என்றே கூறலாம். முதலில் அப்பாவியான நடிப்பும் அதன் பிறகு ஆக்ரோஷமாகவும் இரண்டு விதமான சுபாவத்திலும் நடித்து அசத்தியுள்ளார். சிறிதளவு கூட அவருடைய நடிப்பை குறை சொல்ல முடியாதஅளவுக்கு அவர் நடித்துள்ளார். அவர் மட்டுமின்றி ப்ரித்விராஜ் அவர்களும் தன் கதாபாத்திரமான வர்தாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

இவர்கள் மட்டுமின்றி ஆத்யா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் கச்சிதமாக பொறுந்தியுள்ளார். படத்தின் முதல் பாதியில் ஸ்ருதியை அதிகம் காட்சிகளில் இடம் பெற்றுள்ளார். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அவருக்கு அதிக காட்சிகள் எதும் இல்லை. படத்தில் உள்ள மற்ற நடிகர்களான ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமசந்திரா ராஜு, மது குருசாமி, ஜான் விஜய், மைம் கோபி உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை புரிந்து அதற்கேற்றார் போல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவாளர் அந்த கன்சார் நகரை நம் மனதில் பதிய வைக்கும் அளவிற்கு தனது திறமையை காட்டியுள்ளார். இப்படத்தில் உள்ள கூடுதல் சிறப்பு அம்சம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (Special Effects) மிகவும் நன்றாக உள்ளது.

இயக்குநர்: பிரசாந்த் நீல்

ஒளிப்பதிவாளர்: புவன் கௌடா

இசையமைப்பாளர்: ரவி பாசுர்

தயாரிப்பாளர்கள்: Hombale Films

Salaar

Director: Prashanth Neel

Date Created: 2023-12-22 21:00

Editor's Rating:
4.5
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular