Homeசினிமாகங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா..! ஏன் இவ்வளவு குறைந்த சம்பளம்..!

கங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா..! ஏன் இவ்வளவு குறைந்த சம்பளம்..!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களத்துடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. இந்த நிலையில் தான் தற்போது கங்குவா என்னும் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக புதிய கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் இந்த படமும் ஒன்று.

இந்த கங்குவா படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 350 கோடி ஆகும். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஃபேண்டஸி அக்ஷன் படமாக இந்த கங்குவா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடிங் கிங்ஸ்லீ, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறது. மேலும் இப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் தற்போது இப்படத்திற்கு சூர்யா வாங்கியுள்ள சம்பளம் பற்றிய தகவல் (Suriya Salary in Kanguva Movie) வெளியாகியுள்ளது.

இந்த கங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா மிகவும் குறைவான சம்பளம் தான் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டாமான படத்திற்கு குறைந்த சம்பளம் வாங்க என்ன காரணம் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கங்குவா படத்திற்கு சூர்யா ரூ.28 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று தகவல் (Kanguva Movie Suriya Salary) வெளியாகியுள்ளது.

தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் ஒரு படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் சூர்யா மட்டும் ஏன் இவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கி உள்ளார் என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு முன்னர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து சூர்யா நடிப்பில் வெளியான 24 திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.

Kanguva Movie Suriya Salary

இதன் காரணமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடு செய்யவே தற்போது சூர்யா மிக குறைவான சம்பளத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தன்னால் நஷ்டம் ஏற்பட்டதை சரி செய்யும் வகையில் தான் சூர்யா கங்குவா படத்திற்கு குறைவான சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: Siren Movie OTT Release Date: மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular