தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகர்கள் சிலர் தான். அவர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். இவர் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூறவேண்டும்.
இவர் நடிப்பில் வெளியான படங்களில் ஒரு முக்கிய படம் தான் கில்லி. இந்த படம் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று வரை இந்த படத்திற்கு ரசிகர்கள் இருக்கதான் செய்கின்றனர். அதன் காரணமாக தான் இந்த படம் தற்போது திரைகளில் மீண்டும் ரீரிலிஸ் ஆகியுள்ளது.
இப்போது கூட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் கேட் திரைப்படத்திற்காக ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த கில்லி திரைப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களின் படி தற்போது திரைகளில் ரீ ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்திற்காக 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் 4 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: ரீ-ரிலீஸ் ஆகும் முன்பே வசூல் சாதனை படைத்த கில்லி… |