HomeசினிமாBangaram Movie Update: சமந்தா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் அப்டேட்..!

Bangaram Movie Update: சமந்தா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் அப்டேட்..!

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா (Samantha). இவர் நேற்று அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடினார். சமந்தா பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கும் படத்தின் அப்டேட் (Bangaram Movie Update) வெளியாகி உள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள பல்லாவரத்தில் பிறந்தார் நடிகை சமந்தா. சிறு வயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட சமந்தா மாடலிங் துறையில் பயணிக்க தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

அதன் பிறகு பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நடுநிசை நாய்கள் , நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மத்தியிலும் திரைதுறையினர் மத்தியிலும் (Samantha New Movie Update) கவனம் பெற்றார். அதன் பிறகு சமந்தா நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போத முன்னணி நடிகையாக வழம் வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்த சமந்தா பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு அவர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீப காலங்களாக சமந்தா அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. இந்த நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்த படத்தின் அப்டேட் (Samantha Bangaram Movie Update in Tamil) ஒன்று வெளியாகி உள்ளது.

சமந்தா நடிக்கும் மா இண்டி பங்காரம் (Maa Inti Bangaram) என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இல்லத்தரசி தொற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tralala Moving Pictures என்ற நிறுவனம் தான் இந்த மா இண்டி பங்காரம் படத்தினை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் வேறொருவரின் தயாரிப்பு நிறுவனம் அல்ல. இந்த நிறுவனம் சமந்தாவின் தொடங்கிய உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆகும். ஆகவே இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராகவும் சினிமாதுறையில் களமிறங்கியுள்ளார்.

மேலும் படிக்க: Kanguva Movie Budget: கங்குவா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? எந்திரன் படத்தையே மிஞ்சிடும் போலையே..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular