SAMEER Recruitment 2024: இன்ஜினியரிங் முடித்து பலரும் அரசு வேலைக்கு தயாரிகொண்டிருப்பார்கள். ஒரு சிலர் கிடைத்த வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். SAMEER புகழ்பெற்ற RF & மைக்ரோவேவ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில் SAMEER – லிருந்து சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் திட்ட உதவியாளருக்கான சமீபத்திய வேலை (central govt jobs 2024 in tamil) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கு கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ஆராய்ச்சி விஞ்ஞானி (மின்னணுவியல்), திட்ட உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்) , திட்ட தொழில்நுட்ப வல்லுநர் (எலக்ட்ரானிக்ஸ்) , திட்ட உதவியாளர் (மெக்கானிக்கல்), திட்ட தொழில்நுட்ப வல்லுநர் (மெக்கானிக்கல்) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதிகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆராய்ச்சி விஞ்ஞானி (மின்னணுவியல்)
விண்ணப்பதாரர்கள் BE/B.Tech அல்லது ME/M.Tech அல்லது எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- திட்ட உதவியாளர் (மின்னணுவியல்)
விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளமோவில் மூன்று முதல் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அதற்கு இணையான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- திட்ட தொழில்நுட்ப வல்லுநர் (எலக்ட்ரானிக்ஸ்)
விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று முதல் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.
- திட்ட உதவியாளர் (மெக்கானிக்கல்)
விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவில் மூன்று முதல் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- திட்ட உதவியாளர் (மெக்கானிக்கல்)
விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவில் மூன்று முதல் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தப்பட்ச வயது வரம்பு 25 முதல் அதிகப்பட்ச வயது வரம்பு 35. இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு (SAMEER vacancy details in Tamil 2024) விண்ணப்பிப்பதற்கு எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிபதற்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் sameer.gov.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பணிக்கான சம்பளம் ரூ. 15,100 லிருந்து ரூ.30,000/- வரை கொடுக்கப்படுகிறது.
நேர்காணல் நேரம் மற்றும் நாள்
22-04-2024 – ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு (காலை 9.00 முதல் காலை 9.30 வரை)
24-04-2024 – திட்ட உதவியாளர்கள் மற்றும் திட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (காலை 9.00 முதல் காலை 9.30 வரை) ஆகிய தேதிகளில் நேரடியாக கலந்துக்கொள்ளலாம்.
SAMEER Recruitment 2024: இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை ரெடி..!
SAMEER Recruitment 2024 - லிருந்து சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் திட்ட உதவியாளருக்கான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Salary: 15100-30000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-09
Posting Expiry Date: 2024-04-24
Employment Type : FULL_TIME
Hiring Organization : Society for Applied Microwave Electronics Engineering & Research
Organization URL: www.sameer.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, SAMEER-Centre for Electromagnetics, Taramani, Chennai, 600113, India
Education Required:
- Postgraduate Degree
- Professional Certificate
மேலும் படிக்க: இந்திய நிதி அமைச்சக துறையில் அதிகாரியாக பணிபுரிய அருமையான வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..! |