உலகில் அனைத்தும் நவீனமயமாகதான் உள்ளது. இந்நிலையில் அதற்கு ஏற்றாற்போல் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் புதிய புதிய வடிவங்கள் மற்றும் தொழில்நுட்பம் அடங்கிய பல பொருட்களை அறிமுகப்படுத்தி தான் வருகிறது. இந்நிலையில் தான் உலக புகழ்பெற்ற சாம்சங்க் நிறுவனமானது தனது புதிய படைப்பான Samsung Galaxy Ring-ஐ அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட் ரிங் பார்சிலோனா என்னும் பகுதியில் நடத்தப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் என்னும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ரிங் கடந்த மாதம் தான் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் என்னும் நிகழ்வில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த Galaxy Ring-ஆனது உலகில் உள்ள பல பொருட்களும் நவீனமயமாக்க பட்டுள்ளதை தொடர்ந்து நவீனமயமான இந்த மோதிரத்தினை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. மேலும் இந்த நிலையில் தான் தற்போது இந்த மோதிரம் (Smart Ring) பார்சிலோனா என்னும் பகுதியில் நடத்தப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் என்னும் நிகழ்வில் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது.
இந்த மோதிரத்தில் (Samsung Galaxy Smart Ring) பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மோதிரத்தின் மூலம் மனிதனின் இதய துடிப்பு, ஒருவர் நடக்கும் வேகம், அவரின் ரத்த அழுத்தம் போன்ற பலவற்றை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனை நாம் ஸ்மார்ட் போன் அல்லது கணினி, லேப்டாப் போன்றவற்றுடன் இணைத்து பயன்படுத்தலாம்.
இந்நிலையில் இந்த Galaxy Ring- ஆனது இந்த 2024-ம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் பிறகு அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் மற்றும் மற்று புதிய சாதனங்களுடன் இதனை வெளியிடவும் அதிக அளவிலான் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Moto G04: வெறும் 7,999 ரூபாயில் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்..! மிஸ் பண்ணிடாதிங்க..! |