Homeசினிமாவிரைவில் முடிவுக்கு வர இருக்கும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்..!

விரைவில் முடிவுக்கு வர இருக்கும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்..!

தமிழகத்தை பொறுத்தவரையில் வெள்ளித்திரைக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனரோ என்னவே சின்னத்திரைக்கு எக்கசக்க ரசிகர் உள்ளனர். அதிலும் சீரியல்களுக்கு உள்ள ரசிகர் பட்டாளமே எப்போதும் தனி தான். இந்நிலையில் தான் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியாக ஜீ தமிழ் உள்ளது . இந்த டிவியில் காலை முதல் இரவு வரை அனைத்து நேரங்களிலும் சீரியல்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

அதிகபட்சம் இந்த டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் பிரபலம் தான் ஒவ்வொரு சீரியல்களுக்கு தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல சீரியல் ஒன்று திடீரென முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று தான் சண்டைக்கோழி என்னும் சீரியல். இந்த சீரியலில் ரியா மற்றும் நியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு வருடத்திற்கு மேலாக விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வருகிறது. கடந்த வருடம் மே மாதம் இந்த சீரியல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தான் கூடிய விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் (Sandakozhi Serial Last Day Shooting) வெளியானது.

இந்த நெடுந்தொடருக்கு பதிலாக ஒரு புதிய சீரியலை ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியலை (Sandakozhi Serial) இன்னும் சில எபிசோடுகள் தொடரலாமே என்றும் ஏன் இதற்குள் முடிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Sandakozhi Serial Last Day Shooting
இதையும் படியுங்கள்: நாக சைதன்யாவை காதலிக்கிறாரா? சோபியா துலிபாலா..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular