தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் (Tamizhaga therthal 2024) நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகள் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் பிரசாரம், என்று தமிழக தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
தமிழகத்தில் (Lok Sabha elections 2024) ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்று போட்டிப்போட்டு கொண்டு பிராசாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் (sathya pratha sahu press meet) இன்று செய்தியார்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்ததாவது, தமிழகம் மற்றம் புதுச்சேரிக்கான தபால் வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து பணிகளும் வருகின்ற ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவடைந்து விடும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் (Sathya Pratha Sahu Petti), தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் 100 சதவீம் வழங்கப்பட்டு நிறைவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த 70 ஆயிராம் ராணுவ வீரர்கள் தபால் மூலம் தங்களின் வாக்குகளை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் அவர்களின் வாக்குகளை தபால் மூலம் வருகின்ற ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்கு முன் அவர்களின் வாக்குகளை அனுப்பி வைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உரிய ஆவணம் இல்லாம் ரூ.50000 வரை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் குன்றத்தூர் அருகே 1, 425 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் பாதுக்காப்பு பணிக்கு ஈடுப்பட கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ படைகள் வேண்டுமென டிஜிபி கோரிக்கை வைத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.