Homeசெய்திகள்பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் திரைதுறையினர்..!

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் திரைதுறையினர்..!

பிரபல வில்லன் நடிகர் சாயாஜி ஷிண்டே பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடுமையான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் (Sayaji Shinde Have Chest Pain) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சாயாஜி ஷிண்டே (Sayaji shinde) தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் வில்லனாகவும் (Villain Nadigar Sayaji Shinde) குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். தமிழ் மொழியில் இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தல் பாரதியாராக நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானர்.

பாரதியாராக நடித்த சாயாஜி ஷிண்டே அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்தார். ரஜினி நடித்த பாபா, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், விஜய் நடித்த வேட்டைக்காரன், விக்ரம் நடித்த தூள் மற்றும் தனுஷ் நடித்த படிக்காதவன் போன்ற பல படங்களில் (Villain Actor Sayaji Shinde) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு வயது 65 ஆகும். இன்று காலை Sayaji shinde வீட்டில் இருக்கும் போது திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

Villain Actor Sayaji Shinde

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாயாஜி ஷிண்டே வின் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக கூறியுள்ளனர். தற்போது இவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறியுள்ளனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: இது ஒரு பொன்மாலை பொழுது.. நீயா நானா அரங்கத்தில் ஒலித்த பாடல் ரகசியம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular