தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கல்விக்காக அளிக்கப்படும் முக்கியத்துவம் என்பது அதிகமாக தான் உள்ளது. இதன் காரணமாக தான் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல விதமான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இன்னும் ஏராளமான திட்டங்கள் கல்வி பயலும் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுதான் வருகிறது.
அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நம் தமிழகத்தில் கூட பள்ளி பயிலும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தான் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோல பல புதிய திட்டங்கள் தொடர்ந்து கொண்டுவரப்பட்டு தான் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு புதிய திட்டம் (School Time Changed) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பாரக்கலாம்.
இந்த அறிவிப்பானது பீஹார் மாநிலத்தில் தான் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி அந்த மாநிலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரமானது குறைக்கப்பட்டுள்ளது. இதன் படி இந்த மாநிலத்தில் அரசு பள்ளிகளில் இதுவரை 8 மணி நேரம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது அந்த பள்ளி நேரத்தை 6 மணிநேரமாக பீஹார் அரசு (School Time Change In Bihar) குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பு (School Time Change News) நேற்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டமானது மாநில சட்டசபையிலும் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இனி பீஹார் மாநிலத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ..! முதல் கட்ட சோதனையில் வெற்றி..! |