தமிழகத்தில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தயராகி வருகின்றன. இதற்காக தங்களின் கட்சி பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து செய்து வருகிறது.
வருகின்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். தனித்து போட்டியிடுவது போன்ற பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக (DMK) அரசு தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தனது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கடந்த 4ஆம் தேதி பேச்சிவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.
மீண்டும் நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இதில் மதுரை, கோவை மற்றும் கூடுதலாக ஒரு தொகுதி சேர்த்து மொத்தம் 3 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டது. கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (Communist Party) மதுரை, கோவையில் ஆகிய இரண்டு தொகுதியில் நின்று வெற்றி கண்டது. அதுபோல இந்த முறையும் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்ட நிலையில் திமுக இரண்டு தொகுதிகள் தான் தருவோம் என கூறிவிட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் மட்டும் தான் தருவோம் என திமுக கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதனை ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த 2 தொகுதியில் கோவை தொகுதி தரமுடியாது என திமுக கூறிவிட்டதால், மீண்டும் இந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதில் மீண்டும் கோவை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்க இருப்பதாக எதிர்க்கப்படுகிறது. மீண்டும் திமுக தர மறுத்தால் நாகை, மயிலாடுதுறை தொகுதியை கேட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உதயநிதி பேசியது தவறில்லை..! துரை வைகோ பேட்டி. |