நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. அதிலும் சிறிய குழந்தைகள் மீது நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட புதுச்சேரியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த புதுச்சேரி வழக்கில் 9 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதே போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடைபெற்றுள்ளது. இது கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த வழக்கில் கர்நாடக மாநிலத்தில் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்ற 17 வயது பெண்ணை, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா (Karnataka Ex CM Yediyurappa) பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த 17 வயது பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 17 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண்ணின் தயார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் காரணமாக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் IPC 354 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரும் முன்னாள் முதல்வரின் (Former Karnataka CM Yediyurappa) இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பிரபல விக்கெட் கீப்பர் ஓய்வை அறிவித்தார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! |